டெட் ஸ்பாட்... க்ராக்... தலைகீழ் மாற்றம்... மொபைல் டிஸ்ப்ளே பிரச்னைகளும், காரணங்களும்!

டெட் ஸ்பாட்... க்ராக்... தலைகீழ் மாற்றம்... மொபைல் டிஸ்ப்ளே பிரச்னைகளும், காரணங்களும்!

டிஸ்ப்ளே. ஸ்மார்ட்போன் பயனர்களின் ஆகப்பெரிய பிரச்னை இதுதான். ஏதேதோ சர்வே நடத்துக்கிறார்கள். எத்தனை இந்தியர்களின் மொபைல் போன் டிஸ்ப்ளே உடைந்திருக்கிறது அல்லது கிராக் விழிந்திருக்கிறது என ஒரு சர்வே நடத்தலாம். எப்படியும், 80% பேரின் மொபைலில் விரிசல் இருக்கும்.

டிஸ்ப்ளே தான் மொபைலில் இருக்கும் அனைத்து மென்பொருட்களையும் பார்க்க உதவும் முக்கியமான பாகம். CPU தான் டிஸ்ப்ளேவை இயக்குகிறது. பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் டிஸ்ப்ளேவுக்கும் CPUக்கும் இடையில் ஒரு ஐ.சி(IC) இருக்கும். டிஸ்ப்ளே ஐ.சி என்பார்கள். இதில் பிரச்னை என்றாலும், டிஸ்ப்ளே சரியாக இயங்காது.

பொதுவாக டிஸ்ப்ளேவில் என்ன என்ன பிரச்னைகள் வரும்?

1) முழுமையாக செயலிழந்த டிஸ்ப்ளே
2) பாதி டிஸ்ப்ளே மட்டுமே இயங்கும்.
3) தலைகீழாக தெரியும் டிஸ்ப்ளே.
4) உடைந்த டிஸ்ப்ளே
5) டச் சரியாக இயங்காத டிஸ்ப்ளே

முழுமையாக செயலிழந்த டிஸ்ப்ளே:
மொபைலை கொஞ்ச நேரம் சார்ஜில் போட்டு வைக்கவும். சில சமயம் பேட்டரி பழுதாகி அதனால் மொபைல் ஆன் ஆகாமல் போகலாம். சார்ஜ் செய்த பின் hard reset செய்து பார்க்கவும். முழுமையாக செயலிழந்த மொபைலை சர்வீஸ் சென்டருக்குத்தான் எடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் ஐ.சி யை சோதித்துவிட்டு எதை மாற்ற வேண்டும் எனச் சொல்வார்கள்.

பாதி டிஸ்ப்ளே மட்டுமே இயங்கும்:
சில நேரம் நிறைய ஆப்ஸ் இயங்கிக்கொண்டிருந்தால் மொபைல் டிஸ்ப்ளே சரியாக இயங்காமல் போகலாம். குறிப்பிட்ட பகுதியில் மட்டும் செயலிழக்கும். அது போன்ற சமயங்களில் அனைத்து ஆப்ஸ்களையும் மூடிவிட்டு, மொபைலை ரீஸ்டார்ட் செய்யவும். மீண்டும் இயங்கும்போது டிஸ்ப்ளே சரியாகிவிட்டால், இது மெமரி பிரச்னை. ஒரே நேரத்தில் நிறைய ஆப்ஸ் திறப்பதை தவிர்க்கலாம்.
குறிப்பிட்ட ஆப் இயங்கும்போது மட்டும் டிஸ்ப்ளே சரியாக ரெஸ்பான்ஸ் இல்லாமல் போகலாம். அப்படி ஆனால், யோசிக்காமல் ஆந்த ஆப்-ஐ அன்இன்ஸ்டால் செய்துவிடவும். 

தலைகீழாக தெரியும் டிஸ்ப்ளே:
இதற்கு ஐ.சி. பிரச்னை காரணமாக இருக்கலாம். அருகில் இருக்கும் சர்வீஸ் சென்டரில் சோதனை செய்துவிட்டு ஐ.சி.யை மாற்றுவதுதான் ஒரே தீர்வு. 

\"மொபைல்\"

10000 பட்ஜெட்: என்ன மொபைல் வாங்கலாம்?

உடைந்த டிஸ்ப்ளே:
பல சமயங்களில் உடைந்த டிஸ்ப்ளே கூட இயங்கும். அதனால் அப்படியே விட்டுவிடுவோம். ஆனால், அது சரியில்லை. மொபைலின் டிஸ்ப்ளேவுக்கு மேல் கண்ணாடி புரடக்‌ஷன் இருக்கும். அதுதான் பெரும்பாலும் உடையும். உடைந்தக் கண்ணாடியுடன் தொடர்ந்து பயன்படுத்தினால், டிஸ்ப்ளே முழுமையாக பாதிப்படைந்து மொபைலே பயனற்று போகலாம். போலவே, டிஸ்ப்ளேவில் நிறம் மாறித் தெரியத் தொடங்கலாம். அதுவும் கண்களுக்கு நல்லதல்ல. எனவே டிஸ்ப்ளேவில் க்ராக் விழுந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டியது அவசியம்.

டச் சரியாக இயங்காத டிஸ்ப்ளே:
டெட் ஸ்பாட் என சொல்லப்படும் பிரச்னையில், டிஸ்ப்ளேவின் குறிப்பிட்ட இடம் மட்டும் சரியாக இயங்காது. அப்படி ஆனால், மொபைலை portraitல் இருந்து landscapeக்கு மாற்றவும். இப்போது டெட் ஸ்பாட்டும் சேர்ந்து நகர்ந்தால், மொபைலை ரீஸ்டார்ட் செய்யவும். மற்ற ஆப்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறதா என சோதிக்கவும். டெட் ஸ்பாட் நகராமல் இருந்தால் டிஸ்ப்ளே பிரச்னைதான். உடனே சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்லவும். நகர்ந்தால் அந்த ஆப்-ல் பிரச்னை.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.