டெஸ்டிங்கில் சிக்கிய பி.எம்.டபுள்யூ. F750 GS

டெஸ்டிங்கில் சிக்கிய பி.எம்.டபுள்யூ. F750 GS

பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் ரக பைக் டெஸ்டிங் செய்யும் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்பை படங்களில் புதிய மாடல் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இம்முறை கிடைத்துள்ள தகவல்களில் புதிய F750 GS மூன்று வித மாடல்களில் வெளியிடப்படும் என்றும், இதன் பேஸ் மாடல் சாதாரன சஸ்பென்ஷன், நடுத்தர மாடல் மற்றும் டாப் என்ட் மாடல்களில் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் டைனமிக் ESA ரக சஸ்பென்ஷன் கொண்டிருக்கும். இவ்வகை சஸ்பென்ஷன் சூழலுக்கு ஏற்ப தானாக மாறும் தன்மை கொண்டுள்ளது. 
 
ரோட், ரெயின் மற்றும் டைனமிக் என பைக் செட் செய்யப்பட்டுள்ள பவர் மோடிற்கு ஏற்ப தானாக மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது. இதன் உயர் ரக மாடல் டைட்டானியம் எச்டி ப்ரோட் எக்சாஸ்ட் கொண்டுள்ளது. இதனால் மாடலின் திறன் மற்ற மாடல்களை விட அதிகமாக இருக்கும்.
 
\"\"
 
இதன் செட்டிங்ஸ்களை ஹேன்டிள்பார் கண்ட்ரோல் மற்றும் TFT ஸ்கிரீன் மூலம் இயக்கம முடியும். இவ்வகை மாடல் பைக்களில் இதுபோன்ற அமைப்பு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். புதிய F750 GS மாடலின் டாப் என்ட் மாடலில் ஃபாக் லைட், ஹேன்ட் கார்டு மற்றும் சென்டர் ஸ்டான்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. நடுத்தர மற்றும் உயர் ரக மாடல்களில் எல்இடி மின்விளக்குகள் வழங்கப்படும் நிலையில், பேஸ் மாடலில் கன்வென்ஷனல் பல்புகள் வழங்கப்படுகிறது.
 
முன்னதாக வெளியான புகைப்படங்களில் F850 GS மாடல் போன்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்தது. F750 GS மற்றும் F850 GS மாடல்கள் இந்த ஆண்டு நவம்பர் மாதம் மிலனில் நடைபெற இருக்கும் மோட்டார்சைக்கிள் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியானதும் பி.எம்.டபுள்யூ. F750 GS மாடல் டிரையம்ப் டைகர் 800 ரக மாடலுக்கு போட்டியாக அமையும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.