டெஸ்ட்டிங்கில் ஜீப்பின் புதிய காம்பஸ் எஸ்யூவி!

டெஸ்ட்டிங்கில் ஜீப்பின் புதிய காம்பஸ் எஸ்யூவி!

பிரம்மாண்டமான மற்றும் ஆஃப் ரோடு எஸ்யூவிகளைத் தயாரிப்பதில் புகழ்பெற்ற ஜீப் நிறுவனம், இந்தியாவில் ரேங்ளர் மற்றும் கிராண்ட் செரொக்கி எஸ்யூவி வாயிலாக கால்பதித்துவிட்டது. ஆனால் இவை CBU முறையில் இறக்குமதி செய்து இங்கே விற்பனை செய்யப்படுவதால், அவற்றின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது.
 
எனவே அதனை ஈடுகட்டும் விதமாக, கிராண்ட் செரோக்கி, ரேங்ளர் ஆகிய படா சைஸ் எஸ்யூவிகளைத் தொடர்ந்து, காம்பஸ் எனும் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது ஜீப் நிறுவனம். புனேவில் உள்ள ஃபியட்டின் ரஞ்சன்கவுன் தொழிற்சாலையில் இந்த கார் அசெம்பிள் செய்யப்படும் என்பதால், 25 - 30 லட்சம் விலையில் காம்பஸ் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
\"\"
 
ஆக ஹூண்டாய் டூஸானுக்குப் போட்டியாகக் களமிறங்கும் காம்பஸ், பார்ப்பதற்கு மினி கிராண்ட் செரோக்கி போலவே இருக்கிறது. இதன் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் - உயரம், பெரிய 18 இன்ச் அலாய் வீல், அகலமான வீல் ஆர்ச், ஜீப் கார்களுக்கே உரித்தான க்ரில், ஷார்ப்பான LED ஹெட்லைட் - டெயில் லைட் ஆகியவை, காம்பஸின் பக்கா எஸ்யூவி டிஸைனுக்கு துணைநிற்கின்றன.
 
எடுத்த எடுப்பிலேயே பெட்ரோல்/டீசல் இன்ஜின், மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 2/4 வீல் டிரைவ் எனப் பல ஆப்ஷன்களுடன் வருவது கவனிக்கத்தக்கது. இதில் 170bhp பவர் மற்றும் 35kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய ஃபியட்டின் 2.0 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 
 
அதேபோல, 140bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.4 லிட்டர் MultiAir பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் உண்டு. சர்ப்ரைஸ் ஆப்ஷனாக, ஃபியட்டின் 1.6 லிட்டர் மல்ட்டிஜெட் II டீசல் இன்ஜினும், காமப்ஸில் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்! அதேபோல, Q501 என்ற புனைப்பெயரில் டாடா டெஸ்ட் செய்துவரும் பிரிமியம் எஸ்யூவியில், காம்பஸில் இருக்கும் அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்தான் பயன்படுத்தப்பட உள்ளது!
 
இந்த ஜீப் எஸ்யூவியின் ஆரம்ப மாடல்களில் 2 வீல் டிரைவ் - 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்க, டாப் வேரியன்ட்களில் Terrain Select 4 வீல் டிரைவ் - டிஃப்ரன்ஷியல் லாக் - லோ ரேஞ்ச் கியர்பாக்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 
 
\"\"
 
வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் காம்பஸ் எஸ்யூவியில், 17 Powertrain ஆப்ஷன்கள் மற்றும் Sport, Longitude, Limited, Trailhawk எனும் நான்கு வேரியன்ட்கள் இருக்கும் நிலையில்,  இந்தியாவில் இருக்கக்கூடிய ஆஃப் ரோடு பிரியர்களுக்காக, Trailhawk எனும் வேரியன்ட்டை மட்டும் வெளியிட உள்ளது ஜீப். இதில் வழக்கத்தைவிட 20மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், பாடி கிளாடிங், ஆஃப் ரோடு டயர்கள், திடமான ஃப்ளோர் பேன் ஆகியவை இருக்கின்றன.
 
கேபின் மற்றும் சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, U-Connect 8 இன்ச் டச் ஸ்கிரின் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், 7 பேருக்கான இடவசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட், கிளைமேட் கன்ட்ரோல் ஏஸி, 7 காற்றுப்பைகள், க்ரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய டூயல் டோன் இன்டீரியர், டிரைவர் இன்ஃபர்மெஷன் டிஸ்பிளே, சன் ரூஃப், லெதர் சீட்ஸ், எலெக்ட்ரிக் ஹேண்ட்பிரேக், பின்பக்க ஏஸி வென்ட்கள் என அதிக வசதிகள் இருப்பது பெரிய ப்ளஸ். தற்போது டெஸ்ட்டிங்கில் இருக்கும் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பை படங்களைத் தேனியில் எடுத்திருக்கிறார், மோட்டார் விகடன் வாசகரான சக்தி அருணகிரி. 

 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.