தல டோனிக்கு பிடித்தமான கார்ஸ், பைக்ஸ்: முழு பட்டியல்

தல டோனிக்கு பிடித்தமான கார்ஸ், பைக்ஸ்: முழு பட்டியல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தல மகேந்திர சிங் டோனி கிரிக்கெட்டில் \'பெஸ்ட் ஃபினிஷர்\' என அனைவருக்கும் தெரியும். ஆனால் கிரிக்கெட் ஸ்கோர்களை கடந்து டோனியின் ஃபேவரைட் பட்டியலில் வாகனங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளது. 
 
டோனி வீட்டில் வரிசை கட்டி நிற்கும் விலை உயர்ந்த கார் மற்றும் பைக்குகளே இதற்கு சாட்சி. மோட்டார் சந்தையில் புதுவரவு வாகனங்களில் தனக்கு பிடித்த அனைத்து மாடல்களையும் வீட்டில் நிறுத்தி வைத்துள்ள தல டோனி, மகி ரேசிங் இந்தியா எனும் ரேசிங் அணிக்கு உரிமையாளராக உள்ளார்.
 
இங்கு தல டோனி வாங்கி தன் வீட்டில் வரிசைப்படுத்தியுள்ள மொத்த வாகனங்களின் பட்டியலை பார்ப்போம். 
 
ஆடி கியூ7
 
\"\"
 
இந்தியாவின் அனைத்து பிரபலங்களும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய கார்களில் ஒன்றான ஆடி தல டோனியிடமும் உள்ளது. இவரது வீட்டில் இருப்பது ஆடி பிளாக் கியூ7 டீசல் பதிப்பு. இதன் விலை இந்தியாவில் ரூ.85 லட்சம் வரை இருக்கும். 
 
ஃபெராரி 599 GTO
 
\"\"
 
ஃபெராரி 599 GTO ஸ்போர்ட்ஸ் மாடல் டோனி கரேஜ் அலங்கரித்து வருகிறது. இவரது ஃபெராரியில் இந்திய மூவர்ண ஹூட்டில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை சிலபல கோடிகள் இருக்கும்.  
 
ஜி.எம்.சி. சியெரா
 
\"\"
 
இந்த வாகனம் குறித்து அதிக தகவல்கள் இல்லை என்றாலும், டோனி வீட்டில் இதனை பார்க்கலாம். அதிக பிரபலம் இல்லை என்றாலும் டோனிக்கு பிடித்துவிட்டதால் அவரது வீட்டில் சியெரா இடம் பிடித்துள்ளது.
 
மகேந்திர ஸ்கார்பியோ
 
\"\"
 
தல டோனி வீட்டில் உள்ள மற்றொரு எஸ்.யு.வி. மகேந்திரா ஸ்கார்பியோ. இந்த மாடலில் ரூஃப் வெட்டப்பட்டு, சிறிய ரோல் பொருத்தப்பட்டுள்ளது. 
 
மாருதி சுசுகி எஸ்.எக்ஸ்.4
 
\"\"
 
இந்த மாடலை டோனி 2008-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வென்றார். இந்த போட்டியின் இறுதி பந்தில் தல டோனி சிக்ஸர் பறக்க விட்டு ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் அப்போதைய மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
 
மிட்சுபிஷி பஜேரோ மற்றும் அவுட்லேண்டர்
 
\"\"
 
மகேந்திர சிங் டோனிக்கு பிடித்த வாகனங்களில் மிட்சுபிஷியும் ஒன்று. 2.8 லிட்டர் டர்போடீசல் SFX ட்ரிம் பஜேரோ மற்றும் 2.4 லிட்டர் அவுட்லேண்டர் இவரது கரேஜில் உள்ளது. இரு வாகனங்களின் விலை ரூ.20 லட்சத்திற்கும் அதிகம் ஆகும்.  
 
ஹம்மர் ஹெச்2
 
\"\"
 
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஹம்மர் சில மாதங்களுக்கு இண்டர்நெட் டிரெண்ட் ஆனது. தல டோனியின் சின்ன டிரைவ் அவரது புகைப்படங்களுடன் இணையத்தில் வலம் வந்தது. இதன் விலை ரூ.2 முதல் 3 கோடி இருக்கும். 
 
லேண்ட் ரோவர் ஃபிரீலேண்டர் 2
 
\"\"
 
மகேந்திர சிங் டோனி கரேஜில் இடம் பிடித்துள்ள மற்றொரு எஸ்.யு.வி. இது. இந்த மாடலை மாருதி சுசுகியிடம் சர்வீஸ் எடுத்துச் சென்ற டோனியின் புகைப்படங்கள் இண்டர்நெட் டிரெண்ட் ஆனது. 
 
போர்ஷ் 911
 
\"\"
 
ஜெர்மன் நிறுவனத்தின் போர்ஷ் 911 மாடலில் அடிக்கடி ராஞ்சி தெருக்களில் டோனி வலம் வருவார். இதன் மதிப்பு ரூ.1 கோடி வரை இருக்கும்.  
 
கான்ஃபெடரேட் ஹெல்கேட்
 
\"\"
 
இந்தியாவின் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் ஒன்றாக இருந்த ஹெல்கேட் மாடல் 132PS திறன் கொண்டது. 2.2 லிட்டர் இன்ஜின் கொண்ட ஹெல்கேட் மொத்தமே 150 யுனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. 
 
டுகாட்டி 1098
 
\"\"
 
உலகின் சக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் என்ற பெருமையை கொண்டுள்ள டுகாட்டி 1098 இரண்டு சர்வதேச சாம்பி்யன்ஷிப் போட்டிகளில் வென்றுள்ளது. 
 
கவாசகி நின்ஜா ஹெச்2
 
\"\"
 
டர்போசார்ஜ்டு மோட்டாசைக்கிள்களில் ஒன்றான நின்ஜா ஹெச்2 வைத்திருப்பவர் இந்தியாவின் பணக்காரர் அந்தஸ்தை பெற்றிருப்பர். லிமிட்டெட் எடிஷன் மாடலான ஹெச்2 விலை ரூ.30 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். 
 
கவாசகி ZX-14R
 
\"\"
 
உலகின் அதிவேக ஸ்போர்ட்ஸ்பைக் என்று அழைக்கப்பட்ட கவாசகி ZX-14R மாடலில் 1400 சிசி இன்ஜின் 200PS செயல்திறன் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.20 லட்சம் ஆகும். 
 
ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய்
 
\"\"
 
மகேந்திர சிங் டோனிக்கு பிடித்த பைக்குகளில் இதுவும் ஒன்று. 132NM குரூசர் மாடல் 103B இன்ஜின் கொண்டுள்ளது. 
 
ஹூரோ ஹோண்டா கரிஸ்மா ZMR
 
\"\"
 
முதல் தலைமுறை ZMR மாடல் டோனி ஒரு இறுதி போட்டியில் வென்றார். 
 
ராயன் என்பீல்டு மகிஸ்மோ
 
\"\"
 
டோனி தன் வீட்டில் மிலிட்டரி பதிப்பு ராயல் என்பீல்டு பைக் வைத்துள்ளார். இதனை டோனி ஓட்டும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின. 
 
எமகா தன்டர்கேட்
 
\"\"
 
600சிசி இன்ஜின் கொண்ட மாடலின் டாப் ஸ்பீடு மணிக்கு 240 கிலோமீட்டர் ஆகும். அதிக சௌகரியமாக இருப்பதோடு அதிவேகமாகவும் செல்லும் திறன் கொண்டுள்ளது. 
 
டி.வி.எஸ். அபாச்சி
 
\"\"
 
இந்த பைக்கும் டோனி போட்டியில் வென்ற பட்டியலில் சேரும். இதனை பெற்றதும் ஹர்பஜன் சிங்-ஐ ஏற்றிக் கொண்டு டோணி ஒரு ரவுண்டு வந்தார். டோனியின் கரேஜிஸ் டி.வி.எஸ். மிகவும் வாங்கக்கூடிய மாடல் ஆகும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.