தாணியங்கி கார்களில் பாதுகாப்பை மேம்படுத்த புதிய சிப்செட்: குவால்காம் அதிரடி

தாணியங்கி கார்களில் பாதுகாப்பை மேம்படுத்த புதிய சிப்செட்: குவால்காம் அதிரடி

குவால்காம் டெக்னாலஜீஸ் நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சிப்செட் தாணியங்கி கார்களின் அருகே வரும் மற்ற வாகனங்கள் வருவதை அறிந்து கொண்டு தாணியங்கி கார்களின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. 
 
புதிய குவால்காம் 9150 C-V2X சிப்செட்கள் 2018-ம் ஆண்டு தயாரிக்கப்படும் வாகனங்களில் சோதனை செய்து, 2019-ம் ஆண்டு வெளியாகும் வாகனங்களில் பொருத்தவதற்கான பணிகளில் குவால்காம் ஈடுபட்டுள்ளது. ஆடி, பியூஜியோட் மற்றும் சிட்ரோன் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய குவால்காம் சிப்செட்டினை சோதனை செய்ய சம்மதம் தெரிவித்துள்ளன. 
 
தற்சமயம் பயன்படுத்தப்பட்டு செட்டப்களை போன்று இல்லாமல், புதிய 9150 C-V2X சிப்கள் சிம் கார்டு இல்லாமலே வேலை செய்யும், மாறாக இவை 5.9 ஜிகாஹெர்ட்ஸ் ஃபிரீக்வன்சி பயன்படுத்துகிறது. இந்த ப்ரீக்வன்சி அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் குறைந்த தூரத்தில் செல்லும் வாகனங்களில் பயன்படுத்த தடை விதித்துள்ளது. 
 
\"\"
 
இந்த சிப்செட் ப்ரீக்வன்சி மூலம் வாகனங்களுடன் இணைந்து, வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனம் (V2V), வாகனத்தில் இருந்து உள்கட்டமைப்புகள் (V2I) மற்றும் வாகனத்தில் இருந்து பாதசாரிகள் (V2P) தகவல் அனுப்பும். புதிய சிப்செட் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்யும், அந்தவகையில், கடினமான நடைமுறைகளில் அதிகப்படியான டேட்டா பயன்படுத்தும். 
 
சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், தாணியங்கி வாகன முறையை அதிகரிக்கவும், அதிநவீன கனெக்டெட் சேவைகளை வழங்கவும் புதிய C-V2X சிப்செட் வழி செய்யும். என குவால்காம் நிறுவனத்தின் துணை தலைவர் நகுல் டக்கல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
தற்சமயம் V2X சிப்செட் அதிகப்படியாக பயன்படுத்தப்படுகிறது. ஆடி நிறுவனம் மற்றும் லாஸ் வேகாஸ் நகரம் இடையே ஒப்பந்தமிட்டு, நகரின் போக்குவரத்து சிக்னல்களுடன் ஆடி கார்கள் தகவல் பரிமாற்றம் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பில் இருந்து பச்சை நிறத்திற்கு மாற இருப்பதை ஓட்டுநருக்கு தெரிவிக்க முடியும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.