தினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து

தினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து

அப்பளம் இல்லாத ஒரு மதிய உணவு ஒருபோதும் முழுமை பெறாது. அப்பளத்தை சாம்பார், குழம்பு, ரசம் என எதுவாக இருந்தாலும் அதனுடன் விரும்பி சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.
\"\"
 
மதிய உணவின் ருசியை அதிகரிக்கும் அப்பளம் உடல்நலம், ஆரோக்கியத்தில் தாக்கம் உண்டாகும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்பளத்தில் அதிகமாக இருக்கும் முக்கிய பொருள் உப்பு. பொதுவாகவே இந்திய உணவுகளில் மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்க்கப்படும்.
 
ஆனால், உடலில் இவை இரண்டுமே அளவுக்கு அதிகமாக சேர்வது நல்லதல்ல. முக்கியமாக உப்பின் அளவு உடலில் அளவுக்கு அதிகமாக சேரக் கூடாது. உடலில் ஃ இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்வது, இரத்த அழுத்தம், குமட்டல், தாகம், நீரிழிவு போன்றவை அதிகரிக்க காரணமாகும்.
 
மசாலா மற்றும் உப்பு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உடலில் சேர்வது தவறு. இதன் காரணத்தால் அசிடிட்டி மற்றும் செரிமான கோளாறுகள் உண்டாகலாம்.
 
 
அளவுக்கு அதிகமாக அப்பளம் சாப்பிடுவதால் உண்டாகும் அடுத்த பிரச்சனை மலச்சிக்கல். அப்பளம் வயிற்றில் இருந்து குடல் வரையில் செல்லும் வழியில் தாக்கம் உண்டாக்கி, வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் உண்டாக காரணியாக இருக்கிறது.
 
வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் உணவில் அப்பளத்தை சேர்த்து கொள்வதை தவிர்த்து விடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் 30 வயதை கடந்தவர்கள் தினமும் உணவில் அப்பளத்தை சேர்த்து கொள்வதை தவிர்த்து விடுவது நல்லது. 
 
இன்று குழந்தைகளும் அப்பளத்தை விரும்பி சாப்பிடுகிறார்கள். சிறு வயதிலேயே அப்பளத்தை சாப்பிட ஆரம்பிக்கும் போது அவர்கள் பெரியவர்களாகும் போது உப்பு சம்பந்தமான நோய்கள் விரைவில் வரும் என்பதை அவர்கள் நினையில் கொள்ள வேண்டும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.