தீபாவளி ரிலீஸ்: ரூ.2000 பட்ஜெட்டில் ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன்

தீபாவளி ரிலீஸ்: ரூ.2000 பட்ஜெட்டில் ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன்

ரிலையன்ஸ் ஜியோபோனிற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன் தீபாவளிக்கு முன் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.2000 பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோபோன் விநியோகம் கடந்த வாரம் துவங்கிய நிலையில் ஏர்டெல் மட்டுமின்றி ரூ.1500 பட்ஜெட்டில் மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் பாரத் ஒன் 4ஜி வோல்ட்இ மொபைல் போனினை இந்த வாரத்தில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏர்டெல் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என்பதால் இதில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர ஆண்ட்ராய்டு செயலிகளை இன்ஸ்டால் செய்ய முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஜியோபோன் KAI இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.  

\"\"

ஏர்டெல் நிறுவனத்தின் எல்டிஇ தொழில்நுட்பம் மும்பையில் துவங்கப்பட்டு விரைவில் சென்னையில் துவங்கப்பட இருக்கிறது. இத்துடன் மற்ற நகரங்களில் வரும் மாதங்களில் வோல்ட்இ சேவைகளை வழங்க இருப்பதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன் 4.0 இன்ச் ஸ்கிரீன், 1 ஜிபி ரேம், பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா மற்றும் 1600 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் என கூறப்படுகிறது. எனினும் ஏர்டெல் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு எந்த பதிப்பு கொண்டிருக்கும் என்பது குறித்தும் இன்டெர்னல் மெமரி சார்ந்தும் எவ்வித தகவலும் இல்லை. 

மேலும் ஏர்டெல் ஸ்மார்ட்போனில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படும் என்றும் டூயல் சிம் கார்டு ஸ்லாட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புதிய ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் தற்சமயம் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்தியாவில் தீபாவளிக்கு முன் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.