துரதிர்ஷ்ட சக்திகளை விரட்டி செல்வத்தை அதிகரிக்கலாம்: உடனே இதை செய்யுங்கள்

துரதிர்ஷ்ட சக்திகளை விரட்டி செல்வத்தை அதிகரிக்கலாம்: உடனே இதை செய்யுங்கள்

நமது வீட்டில் உள்ள துரதிர்ஷ்ட சக்திகள் நம்மை அண்டாமல் இருக்கவும், கெட்ட எண்ணங்களிலிருந்து விடுபடவும், பணவரவை அதிகரிக்க செய்யவும் எளிமையான வழிமுறைகள் இதோ!

துரதிர்ஷ்ட சக்திகளை விரட்ட என்ன செய்ய வேண்டும்?
 • துர்சக்திகள் நம்மை அண்டாமல் இருக்க, வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்.
 • ஒவ்வொரு வெள்ளிக் கிழமை காலையில் 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து, மகாலக்ஷ்மியை வேண்டி, கல் உப்பு வாங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வந்தால், வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.

 • 5 வெற்றிலை, 5 கொட்டை பாக்கு, 5 ஒரு ரூபாய் நாணயம் ஆகிய அனைத்தையும் பூஜை செய்து, அதை தாளில் மடித்து உண்டியலில் போட்டு வைக்க வேண்டும். இதை 14 வாரங்கள் வெள்ளிக் கிழமை காலை 6-7 மணிக்குள் செய்து, கடைசியாக அந்த நாணயங்களை எடுத்து கொண்டு மற்றதை கடலில் அல்லது ஓடும் ஆற்றில் போட வேண்டும்.

 • வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை அன்று அன்னதானம் செய்தால், கடன்பிரச்சனை மற்றும் பணப் பிரச்சனைகள் தீரும். எனவே இந்த முறையை ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டும்.

 • வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்தால், கோவில் அல்லது ஆன்மீக மையத்தில் பகலில், முழு மஞ்சள் பரங்கிக்காய் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். இதை செய்தால் மூன்றே நாட்களில் பலனை உணரலாம்.

 • வீட்டில் பணம் வீண் செலவினங்கள் ஏற்பட்டால், தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்களை வைக்க வேண்டும். இதனால் செல்வ வளம் அதிகரிக்கும்.

 • மன வருத்தம், குழப்பம், மன அழுத்தம், சோர்வு போன்ற பிரச்சனைகள் இருந்தால், இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து, காலையில் அந்த நீரை ஊற்றி விட வேண்டும்.

 • தற்கொலை எண்ணங்கள், வாழ பிடிக்காதது போன்ற உணர்வுகள் தொடர்ந்தால், வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட வேண்டும். இதை ஆண்களுக்கும் செய்யலாம்.

 • வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க, சிறிது காகித பூ எடுத்து செல்ல வேண்டும். இதனால் விபத்துக்கள் ஏற்படாது.

 • காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பார்த்து வந்தால், வீட்டில் செல்வ வளம் பெருகும்.

 • வீட்டை சுற்றி நீரோட்டங்கள்இருந்தாலோ, செயற்கையாகஅமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.

 • குழந்தைகள் காரணமில்லாமல் இரவில் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால், அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க வேண்டும். இதனால் குழந்தை நன்றாக உறங்கும்.

 • சமையல் மற்றும் படுக்கை அறைகள் பக்கத்திலேயே இருக்குமாறு அமைத்துக் கொண்டால் தம்பதியர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.