தேசிய ரோமிங்கில் இலவச இன்கமிங் அறிவித்த பிரபல நிறுவனம்

தேசிய ரோமிங்கில் இலவச இன்கமிங் அறிவித்த பிரபல நிறுவனம்

இந்திய டெலிகாம் சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் ரோமிங் கட்டணங்களில் சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வரும் நிலையில் ஏர்செல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரோமிங் சார்ந்த சலுகைகளை அறிவித்துள்ளது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் ரோமிங்கின் போது எவ்வித கட்டணமும் இன்றி இன்கமிங் அழைப்புகளை பெற முடியும். 
 
ரோமிங்கின் போது ஏர்செல் நெட்வொர்க்களில் இலவச இன்கமிங் அழைப்புகளை ஆக்டிவேட் செய்ய வாடிக்கையாளர்கள் *121*909# என்ற எண்ணிற்கு டயல் செய்ய வேண்டும்.  
 
சமீபத்தில் ஏர்செல் குட் நைட்ஸ் என்ற பெயரில் புதிய சலுகையை அறிவித்தது. இந்த சலுகையை கொண்டு அனைத்து பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் காலை 3 மணி முதல் 5 மணி வரை இலவச டேட்டாவினை பெற முடியும். இந்த திட்டத்தை பயன்படுத்தி ஏர்செல் 2ஜி / 3ஜி வாடிக்கையாளர்கள் ஆஃப்லைன் வீடியோ, திரைப்படம், மியூசிக் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தி கொள்ளலாம். 
 
முதல் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகையின் கீழ் தினமும் 500 எம்பி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. ஏர்செல் அறிவித்துள்ள இலவச சலுகை அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படும் என ஏர்செல் அறிவித்துள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.