தேன் கலந்த சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!

தேன் கலந்த சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!

தினமும், தேன் கலந்த சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.

சமையலறையில் உள்ள பொருட்கள், பெரும்பாலும் நம் உடல்நலனை பாதுகாக்கப் பயன்படுகின்றன. அவற்றை கண்காணிக்காமல், நாம் அடிக்கடி மருத்துவர்களிடம் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளோம்.

மருத்துவரிடம் செல்வதை குறைத்து, சமையலறையில் உள்ள பொருட்களின் உண்மை பயனை தெரிந்துகொண்டு, உபயோகித்து நலவாழ்வு வாழ முயற்சிப்போம்.

ரத்த அழுத்தம், மலச்சிக்கல் உள்ளிட்ட நவீன கால நோய்களுக்கு, நல்ல மருந்தாக, தேன் கலந்த சீரக தண்ணீர் உள்ளது. இதனை தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

செய்முறை:
சீரகம், தேன், தண்ணீர், தண்ணீரை கொதிக்க வைத்து, சீரகத்தை போட்டு, அதனை கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். பின்னர், தேன் கலந்தால், இந்த பானம் தயார்.

பயன்கள்:
1) சீரக பானத்தை தினசரி குடிப்பதால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, ரத்தம் சுத்தமாகும். ரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.

2) இதேபோன்று, செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.

3) மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.

4) சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.

5) தேன் கலந்த சீரக தண்ணீர், ரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.

6) சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.

7) தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், ரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.