நளினமான விரல்களுக்கேற்ப ஜொலிக்கும் வைர மோதிரங்கள்

நளினமான விரல்களுக்கேற்ப ஜொலிக்கும் வைர மோதிரங்கள்

வைரம் உலக மக்கள் அனைவரையும் கவர்ந்திழுக்க செய்யும் விலை மதிப்புள்ள கற்களில் ஒன்றாகும். வைரத்தின் சிறப்பே அதன் ஓளி வீசும் திறன்தான். பன்னெடுங்காலமாக ராஜாக்கள், ராணிகளின் மகுடங்களிலும், ஆபரணங்களிலும் அலங்கரித்த வைரங்கள் இன்று அனைத்து தரப்பு மக்களும் அணிய ஏற்றாவாறு சிறியது முதல் பெரியது வரையிலான வைர கற்கள் பதித்த நகைகளாக உலா வருகின்றன.

வைரம் அணிவதில் உள்ள அதி விருப்பத்தின் காரணமாக ஏதேனும் ஓர் வகையில் அக்கல்லை பதித்தவாறு அணிந்து கொண்டிருக்கின்றனர். அதில், மிக முக்கியமான நகைதான் வைர மோதிரம். வைர மோதிரம் அணிந்தவர் ஆளுமையை, அழகை கூட்டுவதுடன் அவரின் மதிப்பை பன் மடங்கு அதிகரிக்கச் செய்கிறது. ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வைர மோதிரம் அணிகின்றனர். அதுபோல் பெண்களின் அழகிய விரல்களுக்கு ஏற்றவாறு பல மாறுபட்ட வடிவமைப்பு மோதிரங்கள் விற்பனைக்கு வருகின்றன.

\"\"

நளினமான விரல்களுக்குகேற்ப வரை மோதிரங்கள் :

பெண்கள் வைர மோதிரங்களை பெரிய மற்றும் பிரம்மாண்ட விழாகளுக்கு அணிந்து செல்ல ஏற்றவாறு வாங்குகின்றனர். வைரம் என்பதே பொதுவாக அன்பின் அடையாளமாகவும், கொண்டாட்டங்களின் அடையாளமாகவும் அணி வகுக்கின்றன. பெண்கள் தங்களது பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு அணிய ஏற்றவாறு விதவிதமான வைர மோதிரங்கள் தயார் செய்யப்படுகின்றன. எனவே, வைர மோதிரங்கள் வாங்க எத்தணித்து கடையின் உள் நுழையும் முன்னரே எந்த மாதிரியான வைர மோதிரம் வாங்குதல் வேண்டும் என தீர்மானித்திட வேண்டும்.

மெல்லிய அளவா, பெரியதா, வைரத்தின் அளவு, அணிய விரலின் தன்மை, புதிய வடிவமைப்புகள் மற்றும் குறிப்பாக நமது வாங்கும் பண மதிப்பு போன்றவற்றிற்கு ஏற்ப மோதிரங்கள் தேர்ந்தெடுப்புக்கு தயார் செய்து செல்ல வேண்டும்.

பெரும்பாலும் பெண்களுக்கு வைர மோதிரங்கள் அவரது அன்புக்குரியவரால் பரிசளிக்கவேப்படுகிறது. இதற்கென ஆண்கள் பலமுறை யோசித்து பாரம்பரிய வடிவிலா, புதிய வரவுகளா என்று பல கட்ட ஆய்வுக்கு பின்னரே வாங்குகின்றனர்.

பெண்களின் விரல் மற்றும் கையின் அளவுக்கு ஏற்பவும், அன்றாட வாழ்வியல் பணிகள், சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பவும் வைர மோதிரங்களை தேர்ந்தெடுப்பது நலம்.

\"\"

வைர மோதிரங்களின் வகைகள் :

வைர மோதிரங்கள் ஒரு வைர கல் பதித்த மோதிரம் என்பது முதல் 100-க்கு மேற்பட்ட சிறு சிறு வைரகற்கள் பதியப்பட்ட மோதிரம் கிடைக்கின்றன. இதன் வடிவங்கள் என்பது பூவடிவம், ஓவல், இதய வடிவம், வட்டம், சிறு பறவை, இதழ்கள், தீபம் போன்ற வடிவங்களில் வைரம் பதித்தவாறு உள்ளன.

வைர மோதிரங்கள் வெள்ளை தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்களிலும், இரண்டு சாயல் கொண்டவாறும், அத்துடன் பெரும்பான்மையாக தங்கத்திலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. வைர மோதிரங்களின் வைர பதியப்படும் அமைப்பு என்பது கோல், புரோஸ், பேவி மற்றும் யெல் என்ற வகையாக உள்ளது. அதில், எந்த வகையான செட்டிங் என ஆராய்ந்து பார்த்திட நல்லது.

\"\"

ஜொலி ஜொலிக்கும் வைர மோதிரங்கள் :

வைர மோதிரங்கள் இக்கால இளம்பெண்களுக்கு ஏற்றவாறு மனதை மயக்கும் பல வடிவங்கள் மற்றும் உருவ அமைப்பில் தயார் செய்யப்படுகின்றன. மெல்லிய கம்பி வட்ட அமைப்பின் நடுவே பெரிய ஒற்றை வைர கல் பதித்த மோதிரம்ஒளி வீசுகிறது. அதுபோல் வட்ட அமைப்பின் பாதி வரை வரிசையாக வைர சிறுகற்கள் அணிவகுக்க நடுப்பகுதியில் வைர பூ ஒன்று பூத்து குலுங்குகிறது. 

இரவில் மங்கிய ஒளியில் மங்கையர் விரல்களில் ஓர் ஒளி ஜோதியாய் பிரகாசிக்கிறது. அழகிய தங்க வளைவு பின்னணியில் முகப்பில் வெவ்வேறு வரிசை மற்றும் டிசைன்களில் பதியப்பட்ட வைர மோதிரம் கண்களை பறிக்கின்றன. வைர மோதிரங்கள் தற்போது அவற்றின் மதிப்பு அட்டைகளுடன் மாற்றும்போது விலை மதிப்பு தரகூடிய அளவில் கிடைக்கின்றன. 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.