நான்கு கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்

நான்கு கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஹானர் 9i என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் நான்கு கேமராக்களை கொண்டுள்ளது. புதிய ஹானர் 9i ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகமான ஹூவாய் மைமேங் 6 மற்றும் முன்னதாக மலேசியாவில் அறிமுகமான ஹூவாய் நோவா 2i போன்றே காட்சியளிக்கிறது. 

புதிய ஹானர் 9i ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா மற்றும் டூயல் செல்ஃபி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபுல் வியூ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 

\"\"

ஹானர் 9i சிறப்பம்சங்கள்:

- 5.9 இன்ச் ஃபுல் எச்டி, 1080x2160 பிக்சல் டிஸ்ப்ளே
- 2.36 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் கிரின் 659 பிராசஸர்
- 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா
- 13 எம்பி + 2 எம்பி செல்ஃபி கேமரா
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த EMUI 5.1
- 3340 எம்ஏஎச் பேட்டரி

\"\"

ஃபுல் வியூ டிஸ்ப்ளே கொண்ட ஹானர் 9i ஸ்மார்ட்போனின் டூயல் கேமரா கொண்டு பொக்கே ஷாட் மற்றும் போர்டிரெயிட் உள்ளிட்டவை எடுக்க முடியும். ஹானர் 8 ப்ரோ போன்றே புதிய ஹானர் 9i ஸ்மார்ட்போனும் புகைப்படம் எடுத்தபின் ஃபோகஸ் மாற்றியமைக்கும் வசதிகளை கொண்டுள்ளது.

பிளாட்டினம் கோல்டு, நேவி புளூ மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கும் ஹானர் 9i ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஹானர் 9i ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஹானர் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி 10,000 எம்ஏஎச் குவிக் சார்ஜ் பவர் பேங்க் ரூ.2,399க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹானர் பவர் பேங்க் சாதனத்தை ஹானர் ஆன்லைன் ஸ்டோரில் அக்டோபர் 28-ம் தேதி வரை ரூ.1,999 என்ற சலுகை விலையில் வாங்கிட முடியும்.

 

 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.