நான்கு பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

நான்கு பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் பி30 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் பாரிஸ் நகரில் அறிமுகம் செய்தது. 

 

ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.47 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் OLED வளைந்த கிளாஸ் டியூ-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஹைசிலிகான் கிரின் 980 7 என்.எம். பிராசஸர், GPU டர்போ 3.0, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் எமோஷன் யு.ஐ. 9.1 இயங்குதளம் கொண்டிருக்கிறது.

 

இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனினை 30 சதவிகிதம் வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மேட் 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக லெய்கா பிராண்டிங் கொண்ட நான்கு லென்ஸ் கேமரா இருக்கிறது.

 

 

இதில் 40 எம்.பி. RYYB சென்சார், 20 எம்.பி. அல்ட்ரா-வைடு சென்சார், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், ToF டெப்த் சென்சிங் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இவை 5x லாஸ்-லெஸ் சூம், 10x ஹைப்ரிட் சூம் மற்றும் 50x டிஜிட்டல் சூம் வசதி கொண்டிருக்கிறது. இந்த கேமரா குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் ISO 409600 ரக புகைப்படங்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஏ.ஐ. சார்ந்த ஹெச்.டி.ஆர். தரத்தில் செல்ஃபி எடுக்கலாம். வளைந்த கிளாஸ் பேக், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் ஹூவாய் மேட் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 40 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது. இது ஸ்மார்ட்போனினை 30 நிமிடங்களில் 70% வரை சார்ஜ் செய்திடும். இத்துடன் 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.

 

 

ஹூவாய் பி30 ப்ரோ சிறப்பம்சங்கள்:

 

- 6.47 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ OLED ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே மற்றும் DCI-P3 Color Gamut

- ஹூவாய் கிரின் 980 பிராசஸர்

- 720 MHz ARM மாலி-G76MP10 GPU

- 8 ஜி.பி. ரேம்

- 128 ஜி.பி. மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.1

- 40 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.6, OIS

- 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2

- 8 எம்.பி 5x டெலிபோட்டோ லென்ஸ், OIS, ToF டெப்த் சென்சார், லேசர் AF, PDAF, CAF, AIS

- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0

- ஹைப்ரிட் டூயல் சிம்

- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

- 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி

- 40 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

- 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

 

ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரீத்திங் க்ரிஸ்டர் மற்றும் அரோரா என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹூவாய் பி30 ப்ரோ விலை ரூ.71,990 என நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. 

 

அறிமுக சலுகைகள்:

 

- ரூ.15,990 மதிப்புள்ள ஹூவாய் வாட்ச் ஜி.டி.யை ரூ.2000க்கு பெறலாம்

- ஆறு மாதங்களுக்கு திரையை மாற்றிக் கொள்ளும் வசதி

- 9 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி

- 5 சதவிகிதம் கேஷ்பேக்

- ரூ.2,200 கேஷ்பேக் வவுச்சர்கள், ஜியோ வழங்கும் இருமடங்கு டேட்டா

- ரூ.5600 மதிப்புள்ள எம்.எம்.டி. கூப்பன்

- ரூ.2,200 மதிப்புள்ள சூம் கார் வவுச்சர்

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.