நான்கு-வீல் டிரைவ் கொண்ட ஹூன்டாய் டக்சன் அறிமுகம்

நான்கு-வீல் டிரைவ் கொண்ட ஹூன்டாய் டக்சன் அறிமுகம்

ஹூன்டாய் டக்சன் 4WD (நான்கு-வீல் டிரைவ்) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய நான்கு-வீல் டிரைவ் டக்சன் எஸ்.யு.வி. மாடல் ரூ.25.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஹூன்டாய் டக்சன் 4WD எஸ்.யு.வி. மாடல் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 182bhp, 4000rpm மற்றும் 400NM டார்கியூ 1750-2500rpm செயல்திறன் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

புதிய டக்சன் 4WD சிஸ்டம் முன்பக்க வீல்-டிரைவில் இருந்து நான்கு-வீல் டிரைவ் மோடிற்கு வாகனம் செல்லும் போதே மாற்றக்கூடிய வசதியை கொண்டுள்ளது. மேலும் 4WD சிஸ்டம்  முன்பக்க சக்கரங்களில் தேவையான செயல்திறன் வழங்காத போது தானாக 4WD சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்ளும். 

\"\"

இந்த வசதி ஓட்டுநர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதோடு, எரிபொருள் மிச்சம் செய்யும். தானாக 4WD சிஸ்டத்திற்கு மாறும் வசதி வழங்கப்பட்டிருந்தாலும், ஓட்டுநர்கள் தானாக 4WD லாக் செய்து கொள்ள முடியும். புதிய 4WD சிஸ்டத்துடன் மேம்படுத்தப்பட்ட டிராக்ஷன் மற்றும் கார்னரிங் கண்ட்ரோல் சிஸ்டத்தை ஹூன்டாய் வழங்கியுள்ளது. இதனால் அதிகப்படியான வேகத்திலும் பெருமளவு க்ரிப் கிடைக்கும்.

ஹூன்டாய் நிறுவனம் டக்சன் GL மாடல்களையும் பெட்ரோல், டீசல் மற்றும் தேவையான பாதுகாப்பு அம்சங்களுடன் வழங்குகிறது. இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டக்சன் 4WD நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஜீப் காம்பஸ் மாடலுக்கு போட்டியாக புதிய டக்சன் 4WD அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.