நாம் அனைவரும் இக்கணமே தவிர்க்க வேண்டிய 8 பழக்கங்கள்..!

நாம் அனைவரும் இக்கணமே தவிர்க்க வேண்டிய 8 பழக்கங்கள்..!

அடிக்கடி பல் துலக்குவது ஒரு ஃபேஷன், கவர்ச்சியாக அழகாக இருக்கிறது என்று சொல்லி ஜீன்ஸ் பேண்ட் அணிவதும் ஒரு ஃபேஷன். ஆம்... இன்றைய இளம்தலைமுறையினர் இதுபோன்று பல பழக்கங்கள் புதிதுபுதிதாக நடைமுறைப்படுத்தி வருவதுகூட ஃபேஷனாகி வருகிறது. ஆனால், இத்தகைய பழக்கவழக்கங்களால் ஏற்படக்கூடிய தீமைகளைப் பற்றி அறியாமல், அதனை அன்றாட வாழ்வில் பின்பற்றி வருவதுதான் வேதனையிலும் வேதனை.

`இது ஆரோக்கியமானது...\' என்று நாம் நினைக்கும் பழக்கவழக்கங்களில் பல தீங்கு விளைவிக்கக்கூடியவை. ஆரோக்கியத்தை மேம்படுத்தும்நோக்கில் பின்பற்றிவரும் சில தவறான பழக்கவழக்கங்கள் தூக்கி எறியப்பட வேண்டியவை... அவை பற்றி இங்கே பார்க்கலாம்... 

சாப்பிட்ட பிறகு பல் துலக்குதல் 
பற்களைத் தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும் என்பதால் தினமும் இரண்டு முறை பல் துலக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். அதற்காக, உணவோ  குளிர்பானமோ உட்கொண்டதும் பல் துலக்கினால், அது பற்களுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும் என எச்சரிக்கிறது ஆய்வுகள். 

அதாவது, அமிலத்தன்மை நிறைந்த உணவுகள், குளிர்பானங்களைச் சாப்பிட்டதும் பல் துலக்கினால் அமிலமானது பல்லின் வெளிப்புற அடுக்கான \'எனாமல்\' பகுதியையும், உட்புற அடுக்கான \'டென்டின்\' எனும் அடுக்கையும் சேதப்படுத்தி விடுமாம். எனவே, பல் துலக்குகிறோம் என்ற பெயரில், அந்த அமிலத்தை ஈறுகளுக்குள் ஆழமாகத் தள்ளிவிடும் வேலையைத்தான் நாம் செய்கிறோம். அதேநேரத்தில் குளிர்பானம் குடித்த ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, பல் துலக்கினால் பாதிப்பும் ஏற்படாதாம். பற்களைப் பாதுகாக்க வேண்டுமெனில் குளிர்பானங்களைத் தவிர்க்கலாம். 

\"பல் 

ஆன்டி ஃபாக்டீரியல் சோப் 
தோல் பகுதியில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக உள்ளன. இவை உடலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் என்ற நம்பிக்கையில் ஆன்டி பாக்டீரியா சோப்களை அதிகமாகப் பயன்படுத்துகிறோம். இவை நன்மை செய்யும் பாக்டீரியாவுக்கும் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம். எனவே, இந்த வகைச் சோப்களை வாரத்துக்கு இரண்டுமுறைக்கு மேல் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். தினமும் பயன்படுத்துவதைத் அவசியம் தவிர்க்க வேண்டும். 

டைட் ஜீன்ஸ் 
இன்றைய தலைமுறையினரிடம் ஜீன்ஸ் பேண்ட் அணியும் வழக்கம் ஃபேஷனாகி விட்டது. டைட்டாக ஜீன்ஸ் பேண்ட் அணிவது தோல் மற்றும் நரம்புப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், அதிக நேரம் ஜீன்ஸ் பேண்ட் அணிவதால் காலுக்குத் தேவையான காற்றோட்டம் கிடைக்காமல் போகிறது. இதனால் கால்களில் அரிப்பு ஏற்படுதல், கால்கள் மரத்துப் போதல் போன்ற பிரச்னைகள் உண்டாகின்றன. உடல் சூட்டையும் அதிகரிக்கும். இனப்பெருக்கம் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தலாம். 

\"பிளாஸ்டிக் 

பிளாஸ்டிக் உபகரணங்கள் 
நாம் பயன்படுத்தும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களிலும் பைசெஃபெனால் - ஏ (Bisphenol A) எனும் நச்சுப்பொருள் கலந்திருக்கிறது. நெகிழ்வுத் தன்மைக்காகப் பைபினைல் (Bi Phenol) போன்றவை பயன்படுத்தப்படுகிறது. இப்படிப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் உணவுடன் கலந்து, ஹார்மோன்களில் சுரக்கும் எண்டோகிரைன் அமைப்பைப் பாதிக்கிறது. மேலும் ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கிறது. எனவே இவற்றுக்கு மாற்றாகக் கண்ணாடி அல்லது ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பொருள்களைப் பயன்படுத்தலாம். 

செயற்கையான ஃப்ரூட் ஜூஸ் 
பழச்சாறு அருந்துவது உடல் நலனுக்கு நல்லது. ஆனால், செயற்கை பழச்சாறுகள் நல்லதல்ல. உதாரணமாக, உடற்பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோர் இந்த மாதிரி ரெடிமேட் பானங்களைக் குடித்தால் நிலைமை இன்னும் மோசமாகும். பழச்சாறு குடிக்க ஆசைபட்டால், ஃபிரெஷ் பழச்சாறுகளைச் சர்க்கரை சேர்க்காமல் அருந்துங்கள். 

\"தும்மல்\" 

தும்மல் 

மீட்டிங்கில் இருக்கும்போது, சுவாரிஸ்யமாகப் பேசும்போது சிலர் தும்மல் வந்தால் அடக்குவார்கள். இதனால் மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்கள் பாதிக்கும். கண்களில் உள்ள வெள்ளைப் பகுதி, காதில் உள்ள மெல்லிய சவ்வுகள்கூடப் பாதிக்கலாம். வயிறு பாகத்திற்கிடையேயுள்ள தடித்த தசைச்சுவரில் பாதிப்பு ஏற்படும். 


பெர்ஃப்யூம் 
அதிக நறுமணம் வீச வேண்டும் என்பதற்காகப் பெர்ப்ஃயூம் தயாரிப்பில் அதிகமான வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் நறுமணம் ஒவ்வாமையை ஏற்படுத்தித் தலைச்சுற்றல், குமட்டல், அலர்ஜி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இவை கண்கள், தொண்டை, தோல் பகுதியில் எரிச்சலையும் ஏற்படுத்திவிடும். எனவே, செயற்கை நறுமண ஊட்டிகளைத் தவிர்த்து, இயற்கையான எண்ணெய் வகைகளைப் பயன்படுத்துவது நல்லது. 

\"ஃப்ரிட்ஜில் 

ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகள் 
ஃப்ரிட்ஜில் வைத்தால் உணவுகள் கெட்டுப்போகாமல் இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், நீங்கள் ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்த சில நிமிடங்களில் அது கெட்டுப் போய் விடும். இது பலருக்குத் தெரிவதில்லை. நீண்ட நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளைச் சாப்பிடுவதால் வயிற்று உபாதைகளும், செரிமானப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. கண்களுக்குத் தெரியாத பூச்சிகள் உணவுகளின் மேல் படர்ந்திருக்கும். இது, வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.