நாளை முதல் டாடா நெக்சன் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்குகிறது

நாளை முதல் டாடா நெக்சன் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்குகிறது

டாடா நிறுவனத்தின் புதுவரவு எஸ்.யு.வி. நெக்சன் முன்பதிவு நாளை துவங்குகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து டாடா விற்பனை மையங்களிலும் வாடிக்கையாளர்கள் புதிய நெக்சன் மாடலை முன்பதிவு செய்ய முடியும். குறைந்தபட்சம் ரூ.11,000 செலுத்தி முன்பதிவை உறுதி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா நெக்சன் எஸ்.யு.வி. 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்டுள்ள நெக்சன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இதன் உற்பத்தி சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட நிலையில் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2016 ஆட்டோ எக்ஸ்போவில் முதல் முறையாக டாடா நெக்சன் அறிமுகம் செய்யப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் சர்வதேச சந்தையில் பிரபலமான AVL, போஷ், மஹேல் மற்றும் ஹனிவெல் போன்ற தொழில்நுட்ப விநியோகஸ்தர்களுடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது. 

\"\"

இதன் பெட்ரோல் வேரியன்ட் மூன்று-சிலிண்டர் டர்போசார்ஜ்டு ரெவட்ரான் மோட்டார், டீசல் இன்ஜின் நான்கு-சிலிண்டர் ஆயில் பர்னர் கொண்டுள்ளது. நெக்ஸ்ட்-ஆன் என்பதன் சுருக்கமான நெக்சன் அடுத்த வகை பொருட்களை குறிக்கிறது. புதிய எஸ்.யு.வி. போர்டு நிறுவனத்தின் இகோஸ்போர்ட் மற்றும் மாருதி சுசுகியின் விடாரா பிரெஸ்ஸா மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சம் 110ps செயல்திறனை 3750 rpm-இல் அதிகபட்சம் 260 Nm டார்கியூ கொண்டுள்ளது. மூன்று டிலிண்டர் பெட்ரோல் இன்ஜினஅ அதிகபட்சம் 110ps செயல்திறனை 5000 rpm-இல் அதிகபட்சம் 260 Nm டார்கியூ கொண்டுள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.