நீரிழிவு நோய் யாருக்கு வர வாய்ப்பு அதிகம்

நீரிழிவு நோய் யாருக்கு வர வாய்ப்பு அதிகம்

நீரிழிவு நோய் யாருக்கு வர வாய்ப்பு

* முந்தைய தலைமுறையில் நீரிழிவு நோய் உடையவர்கள்

* அதிக கார்போஹைட்ரேட், அதிக கொழுப்பு சத்து மிகுந்த உணவை உண்பவர்கள்

* டிரைகிளிசரைடு அதிகம் உள்ளவர்கள், குறைந்த எச்.டி.எல். உடையவர்கள்

* நீரிழிவு நோயின் முந்தைய கட்டத்தில் இருப்பவர்கள் ஆகியோருக்கு டி2டிஎம் டைப்-2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

* கபதோ‌ஷத்தை அதிகப்படுத்தும் உணவு முறை, வாழ்க்கை முறை

* மன அழுத்தம், பயம், துயரம் போன்ற உளவியல் காரணங்கள்.

மேற்சொன்ன காரணங்களால் நீரிழிவு நோய் வரலாம்.

* பால், தயிர் மற்றும் அவற்றாலான உணவு பொருட்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வது

* புதிதாக விளைந்த அரிசி மற்றும் தானியங்களை உண்ணல்

* கரும்பு, கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை அதிகம் பயன்படுத்துதல்

* கார்போ ஹைட்ரேட் மிகுந்திருக்கும் பொருட்களை அதிகம் சாப்பிடுதல்

* அதிகமாக இனிப்பு வகைகளை எடுத்துக் கொள்ளல்

* நீரில், சதுப்பு நிலத்தில் வாழும் உயிரினங்களை அதிகம் உண்பது. (மிகவும் (ஹெவி) - செரிமானத்துக்கு கடினமான) சரிவிகிதத்தில் அமையாத உணவுகளை உண்பது.

மேற்சொன்ன பொருட்களின் அதிக பயன்பாட்டால் நீரிழிவு நோய் வரக்கூடும்.

* சிறுநீரில் வாதம் அதிகரித்திருப்பதற்கான அறிகுறிகள்.

* இதயம் பளுவாக இருப்பதாக உணரல்

* குளிர்ந்த பொருட்கள் மீதும், குளிர்ந்த சூழல் மீதும் விருப்பம்

* உடலில் அதிக எண்ணெய் பசை இருத்தல்

மேற்சொன்ன தன்மைகள் காணப்பட்டால் நீரிழிவு வரலாம்.

* அடிக்கடி உணவு உண்ண தோன்றுவது

தேன் போன்று இனிப்பும், துவர்ப்பும் கலந்த சுவையில் சிறுநீர் இருத்தல்

உலக முழுவதும் உள்ள மக்கள் தொகையில் 24 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது. 2020-இல், 40-45 சதவீதமாக உயரலாம். ஆகவே இந்நோயின் தீவிரத்தாக்கத்தை உணர்ந்து, அடுத்த தலைமுறையினரை தாக்காமாலும், நீரிழிவு நோய் தாக்கியவர்களுக்கு அதை குறைக்கவும், தேவையான முறைகளை போர்க்கால அடிப்படையில் பின்பற்ற வேண்டியது மிகமிக அவசியமாகிறது.

இந்நோய் திடீரென ஒரு நாளில் உருவாகி விடுவதில்லை. நீரிழிவு நோயாக உருவாக 3-ல் இருந்து 5 வருடங்கள் ஆகின்றது. சில சமயங்களில், அதாவது பெரிய அளவில் காயமடைந்த போதும் கடுமையான நோய்த் தொற்று ஏற்படும் போதும், ஆழமான மனபாதிப்புகள் ஏற்படும் போதும், பெண்கள் கருவுறும் சமையத்திலும், 1-6 மாதங்களில் தீவிரம் அடைகிறது.

சமீபத்திய மருத்துவ கூற்றுப்படி, நீரிழிவு நோய் என்பது ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சில வியாதிகளின் தொகுப்பு. க்ளுகோஸ் தான் உடலுக்கு உயிர்ச்சக்தியை தருகிறது. ரத்தம் உடலின் எல்லா பாகங்களுக்கும் க்ளுகோஸை கொண்டு சேர்க்கிறது.

ரத்தத்திலிருந்து, க்ளுகோஸை பிரித்து தர முடியாத நிலையில் க்ளுகோஸ் ரத்தத்தில் தேங்கி விடுகிறது. இருக்க வேண்டிய அளவுக்கு மேல் ரத்தத்தில் சேர்வதும், சிறுநீர் வழியே வெளியேறுவதுமே நீரிழிவு நோய் எனப்படுகிறது.

உடலுக்கு தேவையான க்ளுகோஸ் பலவிதமான உணவு பொருட்கள் மூலம் கிடைக்கிறது. உடலில் க்ளுகோஸின், வளர்சிதை மாற்றத்தில் இன்சூலின், அமைலின், க்ளுக்கான், கார்டிசால், நெப்ரின் ஜிஎல்பி-1, ஜி1பி, வளர்ச்சிக்கான ஹார்மோன் போன்ற ஹார்மோகன்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

இன்சுலின், அமைலின் ஆகியவை கணையத்தின் பீட்டா செல்களில் உற்பத்தி ஆகின்றன.

குளுக்கான், கணையத்தின் ஆல்பா செல்களில் தயார் ஆகின்றன.

நெப்ரின், கார்டிசால் ஆகியவை அட்ரிலின் சுரப்பியில் தயார் ஆகின்றன.

வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் பிட்யூட்ரி சுரப்பியில் உற்பத்தி ஆகின்றது.

இன்சுலின் 3 விதமான செயல்களில் ஈடுபடுகிறது.

1. திசுக்கள் க்ளுகோஸை உறிஞ்ச, சமிக்ஞை கொடுத்து, க்ளுகோஸை உறிஞ்ச வைக்கிறது.

2. கல்லீரல், க்ளுகோஸை, க்ளைக்கோஜன் ஆக மாற்றி, சேமிக்க வைக்க உதவுகிறது.

3. அதன்மூலம் கல்லீரல் மேலும் க்ளுகோஸை உற்பத்தி செய்யாமல் தடுக்கிறது.

“அமைலின்” ‘க்ளுக்ககான்’ அளவை குறைத்து அதன் மூலம் க்ளுகோஸ் மேலும் ரத்தத்தில் கலக்காமல் பார்த்துக் கொள் கிறது. வயிற்றிலிருந்து சிறுகுடலுக்கு உணவு போகும் வேகத்தை குறைக்கிறது. அதன் மூலம் க்ளுகோஸ் உறிஞ்சப்படுகிறது. வேகம் குறைகிறது. மூளையை போதும் என்று நிறைவு கொள்ளச்செய்கிறது.

ஜி.எல்.பி.-ஐ மற்றும் ஜி.எல்.பி. ஆகியவை இன்சுலின் மற்றும் அமைலின் போலவே செயல்படுகின்றன. உணவு குடலில் நுழைந்தும் சமிக்ஞை பெற்று ஜி.எல்.பி.-ஐ மற்றும் ஜி.எல்.பி. உற்பத்தி ஆகின்றன. அவை கணையத்தையும் தூண்டி இன்சுலினை அதிகமாக சுரக்கச்செய்து க்ளுக்கானைக் குறைத்து மொத்தத்தில் ரத்தத்திலுள்ள க்ளுகோஸ் அளவைக் குறைக்கின்றன. மேலும் ஜி.எல்.பி.-ஐ அமைலின் போலவே செயல்பட்டு மூளை போதும் என்ற உணர்வு பெறவும், வயிற்றிலிருந்து குடலுக்குப் போகும் வேகத்தைக் குறைக்கவும் செய்கிறது.

“க்ளுக்கான்” கல்லீரலைத்தூண்டி சேமிக்கப்பட் டிருக்கும் க்ளைகோஜெனை உடைத்து புதிதாக க்ளுகோஸ் உண்டாகச்செய்கிறது.

இவ்வாறு க்ளுகோஸ் வளர்சிதைமாற்றத்தில் கல்லீரல், கணையம், குடல், அட்ரிலின், மூளை நரம்பு மண்டலம் என பல உறுப்புகள் பங்கேற்கின்றன. இந்த உறுப்புகளின் நிலைப்பாட்டில் ஏதாவது மாற்றம் நேர்ந்தால் அங்கு உருவாகும் ஹார்மோன்கள் க்ளுகோசின் வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. சங்கிலித்தொடராக இவை தொடர்கின்றன.

ஏதேனும் ஒரு நோய் வந்தால் எடுத்துக்காட்டாக காமாலை நோய் வந்தால் அதற்கு மருந்து சாப்பிடாமல் எதனால் வந்தது. ப்பிளுரூபின் எனும் பித்தப்பை சுரப்பு செரிமான மண்டலத்துக்குள் போக முடியாமல் அடைப்பு ஏற்பட்டு ரத்தத்தில் கலக்கிறதா அல்லது வேறு காரணமா என அறிந்து அதற்கும் மருந்து சாப்பிட வேண்டும்.

அறிவியலில் ஓர் அங்க மான உடலியலானது நீரிழிவு நோய் எனப்படும் க்ளுகோஸ் வளர்சிதை மாற்றக்கோளாறுகளுக்கு ஹார்மோன்கள் செயல் பாட்டை முன்னிறுத்துகின்றது. ஆயூர்வேதமோ வாதம், பித்தம், கபம் ஆகிய 3 தோ‌ஷங்களின் நிலை ப்பாட்டை முன்நிறுத்துகிறது.

ஆயூர்வேதப்படி “ப்ரமேகம்” என்னும் சிறுநீரகக் கோளாரின் முற்றிய நிலையே மதுமேகம் எனப்படும். நீரிழிவு நோய் ஆகும். க்ளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் நேரும் மாறுதல்களால் முதலில் கபதோ‌ஷத்தின் சமநிலை மாறுகிறது. அது உடல் முழுவதும் பரவி மேகதாது வை (கொழுப்புத்திசுக்களை) பாதிக்கிறது. அதன் காரணமாக வாத தோ‌ஷத்திலும், சிறுநீர்ப் பாதையிலும் அடைப்பு ஏற்படுகிறது. சிறுநீரில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

கபதோ‌ஷ மாறுதல் தீவிரமாகும் போது க்ளுகோஸ் வளர்சிதை மாற்றத்தின் மாறுபாடுகள், குறைபாடுகள் தீவீரமடைந்து எழும்பு, மஜ்ஜை, பிற திசுக்கள், இன்சுலின் உட்பட பிற ஹார்மோன்கள் எல்லாவற்றையும் பாதித்து கடைசியில் ஓஜஸ் எனப்படும் உயிர்சக்தியையும் பாதிக்கிறது.

நம் முன்னோர் 20 வகையான நீரிழிவு நோய் பற்றி கூ றுகின்றனர்.

இதில் 10 வகை கபதோ‌ஷ மாறுபாட்டால் வருவது இதற்கு பரம்பரை காரணமில்லை என்றால் முழுவதும் குணப்படுத்தலாம்.

பித்ததோ‌ஷ மாறுபாட்டால் வரும் 6 வகையையும் கட்டுப்பாட்டில் வைக்கலாம். பக்கவிளைவை தடுக்கலாம்.

வாததோ‌ஷ மாறுபாட்டால் வரும் 4 வகையை குணப்படுத்த முடியாது. வாழ்நாள் முழுக்க கட்டுப் பாட்டில் வைக்கலாம்.என்று சொல்கின்றனர்.

நவீன மருத்துவம் வகை-1. வகை-2. கர்ப்பகால நீரிழிவு என்று நீரிழிவு நோயை வகைப்படுத்துகின்றது. சில சமையங்களில்

வகை-1 என்ற வகையில் இன்சுலின் சுரப்பதில்லை உடலே உடலுக்கு எதிரான சில வினைகளைப் புரிகிறது. இன்சுலின் சுரக்கும் இடமான கணையத்தின் பீட்டா செல்களின் அழிவு காரணமாக இன்சுலின் சுரப்பதில்லை. ஆகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

இன்சுலின் போதுமாக அளவு சுரப்பதில்லை அல்லது சரிவரப்பயன்படுவதில்லை. முன்பு வயதானவர்களுக்கு மட்டும் வந்தது இப்போது பருவ வயதினரையும், சிறு குழந்தைகளையும் கூடத் தாக்குகிறது.

அதிக உணவு, அதிக தூக்கம், கொழுப்புசத்து அதிகம் உள்ள உணவுகள், அதிக இனிப்பு, அதிக மது, உடல் எடை அதிகமாக இருத்தல், சோம்பலான வாழ்க்கை முறை, ஆகியன வகை-2 நீரிழிவு நோய்க்கு காரணங்களாக கூறப்படுகின்றன.

மகளிர் கருவுறும் சமயத்தில் இது வருகிறது. இது குழந்தை பிறந்த பின் மறையலாம். அல்லது சில ஆண்டுகள் கழிந்த பின் மீண்டும் வரலாம். பிறந்த குழந்தைக்கும் நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளது.

கருவுறுவதற்கு முன் சிகிக்சை மேற்கொள்வதன் மூலம் அதை தவிர்க்கலாம். இல்லாவிடில் பிறக்குமுன் குழந்தை அதிக எடை கூடுதல், பிறக்கும்போது மூச்சு விட சிரமம், குழந்தை பருவத்தில் அதிக பருமனாதல் ஆகியன நேரலாம். குழந்தை பெரியதாக இருந்தால் சிசேரியன்தான் ஒரே வழி. அதுதவிர இதயம் சிறுநீரக கண்கள் நரம்புகள் பாதிக்கப்படலாம்.

இந்த வகைதவிர கணையத்தில் வரும் பாதிப்புகள், அறுவை சிகிச்சை, தொடர்மருந்துகள், தொற்றுநோய் ஆகியவை காரணமாக நீரிழிவு வரலாம்.

-டாக்டர். ஜெ. விஜயாபிரியா

 

(போன் 0422-2367200, 2313188, 2313194)

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.