நெடுந்தூர கார் பயணத்திற்கு முன் அவசியம் கவனிக்க வேண்டியவை

நெடுந்தூர கார் பயணத்திற்கு முன் அவசியம் கவனிக்க வேண்டியவை

நெடுந்தூர பயணங்கள் ஒவ்வொருவர் மனதிலும், நீங்கா நினைவுகளையும், அழகிய அனுபவங்களையும் பரிசளிக்கும். இந்த பரிசு மனதில் புதைந்திருக்கும் கவலைகளை போக்கி புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். இயந்திரமாய் சுழலும் மனித வாழ்க்கையில் அவசியமான இத்தகைய பரிசை தேடிப் புறப்படும் இவற்றை கவனித்தீர்களா?
 
உங்களின் நெடுந்தூர கார் பயணம் எவ்வித சிரமம் இன்றி அமைய, நீங்கள் கிளம்பும் முன் கவனிக்க வேண்டியவற்றை இங்கு தொகுத்துள்ளோம். கார் பயணம் மேற்கொள்பவர்கள் அவசியம் கவனிக்க வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம். 
 
\"\"
 
* காரின் அனைத்து டையர்களையும் சரிபார்க்க வேண்டும். பயணத்திற்கு முன் காரில் உள்ள கூடுதல் டையர் (ஸ்டெப்னி டையர்) சீராக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 
 
* டையர் டிரெட் ஆழத்தை சிறிய காயின் கொண்டு சரிபார்க்க வேண்டும். இதில் டையர் பயணத்திற்கு ஏற்றது தானா என்பது தெரிந்து விடும். இதானால் டையர் மாற்ற வேண்டியிருந்தாலும் பயணத்திற்கு முன்னரே மாற்றிவிடுவது நல்லது. 
 
* டையர் வரிசை (வீல் அலைன்மென்ட்) சீராக உள்ளதா என்பதை சரி பார்ப்பது அவசியம் ஆகும். சீரற்ற டையர்களுடன் பயணம் மேற்கொள்ள நினைத்தால் பயணம் எந்நேரத்திலும் தடைப்படலாம். 
 
* டையர்களில் ஏதேனும் விரிசல், அதிகப்படியான சிறிய கற்கள் மற்றும் டையரை சீக்கிரம் பாதிக்கும் அமசங்கள் உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். சில டையர் ஏற்கனவே அதிகம் பயன்படுத்தியது எனில் அதனை உடனே மாற்றிவிடுவது நல்லது. 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.