நோக்கியா 6 முன்பதிவைத் தொடங்கியது அமேசான்!

நோக்கியா 6 முன்பதிவைத் தொடங்கியது அமேசான்!

அடைந்தால் நோக்கியா... இல்லையேல் போய்க்கியா” எனக் காத்திருக்கும் ஸ்மார்ட்போன் காதலரா நீங்கள்? ஒரு வழியாக அதன் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். அமேசான் தளத்தில் இப்போதே ரிஜிஸ்ட்ரேஷன் செய்துகொள்ளலாம். ஆனால், ஆகஸ்ட் 23-ம் தேதிக்குப் பிறகுதான் மொபைல் கைக்கு கிடைக்கும். \'நோக்கியா 6 \'ஆன்லைனில் மட்டுமே வெளியாகவிருக்கும் மொபைல். இதற்கு முந்தைய மாடல்களான நோக்கியா 5 மற்றும் 3 ஆகியவை ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனை ஆகின.

\'நோக்கியா 6\'-ன் விலை 14,999. சிலபல கேஷ்பேக் ஆஃபர்களையும் அமேசான் அறிவித்திருக்கிறது.

வசதிகள்:
5.5 இன்ச்  IPS FHD (1080 x 1920)  டிஸ்ப்ளே.
கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு.
64 - பிட் ஸ்நாப்டிராகன் 430 MSM8937 ஆக்டாகோர் பிராஸசர்.
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி.
மெமரி கார்டு மூலமாக மெமரியை 128 ஜிபி வரை அதிகரித்துக்கொள்ளும் வசதி.
16 மெகா பிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் முன்புற கேமராவைக்கொண்டுள்ளது.
டூயல் சிம் மற்றும் 4G LTE வசதி இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளம்.
3,000 mAh திறன்கொண்ட பேட்டரி.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.