பஜாஜ் டாமினர் 400 மேட் பிளாக் அறிமுகம்: விலை மற்றும் முழு தகவல்கள்

பஜாஜ் டாமினர் 400 மேட் பிளாக் அறிமுகம்: விலை மற்றும் முழு தகவல்கள்

இந்தியாவின் முன்னணி இருசக்கர் வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ தனது ஃபிளாக்‌ஷிப் மாடல் மோட்டார்பைக், டாமினர் 400 அப்கிரேடு செய்துள்ளது. பைக் பிரியர்களை அதிகம் கவரும் மேட் பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
டாமினர் 400 இன்ஜின் 373.3 DTS-i மில் மற்றும் 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்ஜின் 35PS பவர் 35 Nm பீக் டார்கியூ கொண்டுள்ளது. எல்.இ.டி. ஹெட்லேம்ப், ரிவர்ஸ் பேக்லிட் எல்.சி.டி. ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் ஸ்டேம்ப்டு மெட்டல் ஸ்விங்ஆர்ம் வழங்கப்பட்டுள்ளது.  
 
முழுமையான மேட் பிளாக் நிறம் கொண்டிருப்பதால் பஜாஜ் டாமினர் 400 தோற்றம் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. மேட் பிளாக் தவிர மூன் வைட், மிட்நைட் ப்ளூ மற்றும் டுவிலைட் பிளம் நிறங்களிலும் கிடைக்கிறது.
 
\"\"
 
அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் விதமாக டூயல் சேனல் ஆன்டி-பிரேக்கிங் சிஸ்டம், 320 மில்லிமீட்டர் முன்பக்க டிஸ்க் மற்றும் 230 மில்லிமீட்டர் பின்பக்க டிஸ்க் பைக்கின் வாகனத்தின் நங்கூரம் போன்று செயல்படுகிறது. இத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் எல்இ.டி. டெயில் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் டாமினர் 400 ஏ.பி.எஸ். ட்ரிம் இல்லாத மாடலின் விலை ரூ.1,41,045, ஏ.பி.எஸ். பதிப்பு ரூ.1,51,215 (ஜி.எஸ்.டி. உட்பட ஷோரூம் விலை, டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.