பட்ஜெட் ஸ்மார்ட்போன்களிலும் சாம்சங் பே வசதி வழங்கப்படலாம்

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களிலும் சாம்சங் பே வசதி வழங்கப்படலாம்

சாம்சங் பே சேவை சில தினங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. உயர் ரக ஸ்மார்ட்போன்களில் மட்டும் வழங்கப்பட்ட இந்த சேவை விரைவில் பட்ஜெட் மற்றும் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட இருப்பதாக தகல்கள் வெளியாகியுள்ளது. 
 
இது குறித்து வெளியான தகவல்களில் சாம்சங் பே சேவைக்கு இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பு மற்றும் வெற்றியை பொருத்து இந்த சேவையை மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்வது குறித்து நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் தயாரிக்கப்பட்டுள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்களில் சாம்சங் பே சேவையை வழங்கும் வன்பொருள் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. 
 
\"\"
 
சாம்சங் பே வசதியினை இயக்க குறைந்த ரக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் கடவுச்சொல் பதிவு செய்ய வேண்டும். சாம்சங் பே சேவையில் மாக்னெடிக் செக்யூர் டிரான்ஸ்மிஷன் மற்றும் என்எப்சி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை பண பரிமாற்றங்களை கைரேகை ஸ்கேனர் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டவற்றை கொண்டு மேற்கொள்ள வழி செய்யும். 
 
தற்சமயம் சாம்சங் பே சேவையானது கேலக்ஸி நோட் 5, கேலக்ஸி S7, S7 எட்ஜ், கேலக்ஸி S6 எட்ஜ்+, கேலக்ஸி A5 (2016) உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.