பட்ஜெட் விலையில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 அறிமுகம்

பட்ஜெட் விலையில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 அறிமுகம்

அசுஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 என பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 6 ஜிபி ரேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 
 
ஸ்டாக் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட், மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
 
 
 
அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சிறப்பம்சங்கள்:
 
 
- 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிபர்செட்
- அட்ரினோ 509 GPU
- 3 ஜிபி / 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி / 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்பி / 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ், f/2.2
- கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
 
இந்தியாவில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 டீப்சீ பிளாக் மற்றும் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.10,999, 4 ஜிபி ரேம் மாடல் ரூ.12,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மே 3-ம் தேதி முதல் புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விறப்னை செய்யப்பட இருக்கிறது.
 
அறிமுக சலுகைகள்:
 
 
- ரூ.3200 மதிப்புடைய வோடபோன் சலுகை
 
- ரூ.199 மற்றும் அதற்கும் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு 10 ஜிபி கூடுதல் டேட்டா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது.
 
- வோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் ரூ.399 அல்லது அதற்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் போது 10 ஜிபி கூடுதல் டேட்டா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. 
 
- வோடபோன் ரெட் ரூ.499 அல்லது அதற்கும் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு வோடபோன் ரெட் ஷீல்ட் டிவைஸ் செக்யூரிட்டி திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
 
- பிளிப்கார்ட் மொபைல் ப்ரோடெக்ஷன் சலுகை ஸ்மார்ட்போனின் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய ஒரு வருடத்திற்கு ரூ.49 என்ற விசேஷ கட்டணத்தில் பெற முடியும்.
 
- பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் அனைத்து கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்துவோர் வட்டியில்லா மாத தவணை முறை வசதியை பெற முடியும்.
 

 

- பிளிப்கார்ட் சார்பில் ரூ.1000 வரை கூடுதல் எக்சேஞ் சலுகை வழங்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.