பழைய ஸ்டைலில் மீண்டும் களமிறங்கும் யெஸ்டி..

பழைய ஸ்டைலில் மீண்டும் களமிறங்கும் யெஸ்டி..

இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் பி.எஸ்.ஏ. மற்றும் யெஸ்டி பிரான்டுகளை மீண்டும் அறிமுகம் செய்ய இருப்பதாக மஹேந்திரா & மஹேந்திரா அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக தலைவர் பவன் கொயன்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் விரைவில் நுகர்வோர் பிரிவு வாகனங்களில் இருந்து உயர்-ரக பிரீமியம் பைக்குகளுக்கு மாற இருப்பதை உறுதி செய்துள்ளார்.
 
கடந்த ஆண்டு மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம் ஜாவா மற்றும் பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள் நிறுவனங்களை கைப்பற்றி, ஜாவா இருசக்கர வாகனம் மற்றும் பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்களை இரண்டு ஆண்டுகளில் வெளியிடுவதாக அறிவித்தது.  
 
\'யெஸ்டிஸ் ஆஃப் இந்தியா\' (‘Yezdis of India) இணையதளம் துவங்கப்பட்டுள்ளதை ட்விட்டரில் ஆனந்த் மஹேந்திரா தெரிவித்தார். பி.எஸ்.ஏ. மற்றும் யெஸ்டி பைக்குகளின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. புதிய மாடல்கள் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
\"\"
 
ஜாவா 350 சிசி இருசக்கர வாகனம் மே மாதம் வெளியிடப்பட்டது. 207 ஜாவா 350 என அழைக்கப்படும் பைக் 350சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் 32 Nm டார்கியூவில் 4,750 rpm மற்றும் 26 bhp செயல்திறன் 5,250 rpm கொண்டுள்ளது. ABS கொண்ட முதல் ஜாவா 350 OHC மாடல் ஆகும். 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 
 
இந்தியாவில் 70 மற்றும் 80களில் யெஸ்டி பிரபலமான மாடலாக இருந்தது. மஹேந்திரா & மஹேந்திரா இரண்டு புதிய மாடல்களை அடுத்த ஆண்டிற்குள் வெளியிட திட்டமிட்டுள்ளது. 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.