பவர்பேன்க் முதல் ஸ்மார்ட்ஃபோன் வரை... இவை ஸ்டூடண்ட்ஸ் கேட்ஜெட்ஸ்!

பவர்பேன்க் முதல் ஸ்மார்ட்ஃபோன் வரை... இவை ஸ்டூடண்ட்ஸ் கேட்ஜெட்ஸ்!

 ஒவ்வொரு வாரமும் ரிலீஸ் ஆகும் படங்களை விட ரிலீஸ் ஆகும் கேட்ஜெட்களின் எண்ணிக்கையே அதிகம். அதில், மாணவர்கள் மத்தியில் பட்டையைக் கிளப்பும் கேட்ஜெட்களின் லிஸ்ட் இது.


சாம்சங் கேலக்சி டாப் S3

\"கேட்ஜெட்ஸ்\"

கலைகள் மற்றும் வடிவமைப்பு படிக்கும் மாணவர்களுக்கு 9.7\" உடன் கூடிய AMOLED ஸ்கிரின் உடைய  S3 டேப் ஒரு மிகச் சிறந்த தேர்வு.’பென்’ வசதி வரைபவர்களுக்குக் கூடுதல் பிளஸ். ஒரே நேரத்தில் கேம் விளையாடிக்கொண்டே வேலை பார்க்கும் மல்டி டாஸ்க் மேதாவிகளுக்கும் ஒன்று முதல் இரண்டு நாள்வரை சார்ஜ் தாங்கும் தன்மையுடையது இந்த டேப்.

மைக்ரோசாஃப்ட், எக்சல், பவர் பாய்ன்டு மற்றும் அடிப்படையான விண்டோஸ் தேவைகள் தரபட்டுள்ளது. கீபோர்டு சிறப்பாக இல்லையென்றாலும், விலையிலும் வடிவமைப்பிலும் S3 சூபர்.

 பையர் HD 8

\"கேட்ஜெட்ஸ்\"


காலேஜ் பையில் புத்தகங்களை வைக்க தேவைப்படும் இடத்தை விட லாப்டாப் போன்ற சாதனங்களுக்கு அதிக இடம் தேவைப்படுகிறது. அதைக் குறைக்க அமேசான் நிறுவனம் பையர் HD 8 சிலெட்டை வெளியிட்டுள்ளது. மிகக் குறைந்த விலையில் சிறந்த டிஸ்ப்ளே மற்றும் அதிக வேகம் டெக்கி மாணவர்களுக்கு மேலும் ஒரு பிளஸ்.

 

 டைடன் பவர் பேங்க்
  \"ஏன்டா கடுப்பா இருக்க?\" என்ற கேள்விக்கு, போன்ல சார்ஜ் இல்ல என்ற பதில் வரும் காலம் இது. டைடன் இதற்கு சிறந்தத் தீர்வு தருகிறது. 20,100mAh பேட்டரி கெப்பாசிட்டி கொண்ட இதில் இரண்டு USB கனெக்ட் செய்து 3.4A வேகத்தில் சார்ஜ் செய்ய முடியும். 

ஐபோன் 7 / ஐபோன் 7+
”கெத்தான போன்” என்று யாரைக் கேட்டாலும், முதலில் வரும் பெயர் ஆப்பிள். அந்தப் பெயருக்கும், ஆகாயம் எட்டும் விலைக்கும் ஏற்ற சரக்கு அதில் இருக்கத்தான் செய்கிறது. வழக்கம்போல் முன் பின் கேமரா கிளாரிட்டி அருமை. காசு ஏற்ற கூலி என்பது போல கொஞ்சம் எக்ஸ்ட்ரா செலவு செய்தால், 128 GB மெமரி கிடைக்கும். எல்லாவற்றிலும் எக்ஸ்ட்ரா என்றான பின் மெமரியில் மட்டும் ஏன் கஞ்சத்தனம்?

LG g6

\"mobile\"


 S8/S8+  நிகரான டிசைன் LG g6லும் உண்டு. மேலும் சாம்சங்கை விட உறுதியான டிஸ்ப்ளேவும் உண்டு.. வைட் ஆங்கிள் கொண்ட கேமரா நமது நண்பர்கள் அனைவரையும் ஒரே ஃப்ரேமில் அடக்க உதவும். ஃபிங்கர் பிரின்ட் சென்சார் உரிய இடத்தில் அமைந்துள்ளது கூடுதல் வசதி.


என்னதான் LG பழையவகை ப்ராசசர்களை உபயோகித்தாலும் வேகத்தில் குறைசொல்ல இடமில்லை. பேட்டரி திறனும் ஓகே. வேகமாக சார்ஜ் ஏறும் வசதி. மொத்தத்தில் லக்ஸரி லைஃப் ஃபீல் தர சரியான மொபைல் இது.

ஒன்+5
ஐபோன் சாம்சங் போன்ற பெரிய பிராண்டுகள் அளவுக்குப் பெயரை பெறாவிட்டாலும் அதற்கு நிகரான கேமரா கிளாரிட்டியை சில ஆயிரம் ரூபாய்கள் குறைவாகவே வழங்குகிறது ஒன்+ நிறுவனம். அழகிய வடிவம், அதிக பேட்டரி ஆயுள், விரைவாக சார்ஜ் ஆகும் தன்மை என மிரட்டுகிறது.  மொத்ததில் சாம்சங், ஐபோன் இடையே தனியாக தெரிய நினைப்பவர்களுக்கு ஒன்+ ஒரு வரப்பிரசாதம்.

ஹானர் 8
  விலை கம்மியா... இருக்கணும். ஆன லுக்கா இருக்கணும்” என நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் ஹானர். 12 மெகாபிக்சல் கொண்ட கேமரா 5.2\" ஸ்கிரீனில் நம்மை மிரள வைக்கிறது.  Huawei நிறுவனம் தனது EMUI யை ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லாவுடன் இணைத்து  ஹானர் 8 ல் களமிறக்கியுள்ளது. இன்னும் சிறப்பான லுக்கு தரும் ஹானர் 8 pro வும் களத்தில் இருக்கிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.