பிக்பைட் ஆஃபர்: 1000 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்

பிக்பைட் ஆஃபர்: 1000 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்

இந்திய டெலிகாம் சந்தையில் டேட்டா போட்டி வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் அதிக டேட்டாவை வழங்கி வருகிறது. அந்த வகையில் போட்டியை பலப்படுத்த பாரதி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. 
 
அதன்படி பாரதி ஏற்டெல் ஆறு புதிய திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ரூ.599, ரூ.699, ரூ.849, ரூ.999, ரூ.1199 மற்றும் ரூ.1599 விலையில் புதிய திட்டங்களில் 1000 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதல் டேட்டாவிற்கான வேலிடிட்டி மார்ச் 31, 2018 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.    
 
புதிய சலுகையை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெற முடியும் என பாரதி ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த சலுகை ஏர்டெல் DSL சேவைகளை ஜூன் 12-ம் தேதி முதல் பெறும்ம அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஏர்டெல் பிராட்பேண்ட் வழங்குகிறது. 
 
\"\"
 
 
ஏர்டெல் புதிய சலுகையை பெறுவது எப்படி?
 
 
* இந்த சலுகையை பெற நினைக்கும் வாடிக்கையாளர்கள் www.airtel.in/broadband என்ற இணையதளம் செல்ல வேண்டும். 
 
* அடுத்து துவக்க திட்டம் ஒன்றை தேர்வு செய்து, புதிய பிராட்பேண்ட் இணைப்பை பெற மொபைல் நம்பர் மற்றும் வீட்டு முகவரியை பதிவு செய்ய வேண்டும். அல்லது வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டு ஏர்டெல் பிராட்பேண்ட் சேவைகளை பெற முடியும்.
 

 

* வாடிக்கையாளர்கள் தேர்வு செய்த திட்டத்தில் வழங்கப்படும் டேட்டாவை பயன்படுத்தியதும் பிக்பைட் டேட்டாவின் கீழ் வழங்கப்பட்ட கூடுதல் டேட்டாவை பயன்படுத்த முடியும். பயன்படுத்தாத பிக்பைட் டேட்டா அடுத்த மாத கணக்கில் சேர்க்கப்படும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.