பிரைம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை: ஜியோ அதிரடி

பிரைம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை: ஜியோ அதிரடி

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு புதிய கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரூ.398 அல்லது அதற்கும் அதிகமான தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் ரூ.700 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
 
ஜியோ அறிவித்திருக்கும் ரூ.700 கேஷ்பேக் ரூ.400 மற்றும் ரூ.300 என இரண்டு முறை தேர்வு செய்யப்பட்ட டிஜிட்டல் வாலெட்களில் வழங்கப்படுகிறது. ரூ.400 மதிப்புடைய கேஷ்பேக் தொகையை ஜியோ ரூ.50 மதிப்புடைய 8 வவுச்சர்களை வழங்குகிறது. இந்த வவுச்சர்களை கொண்டு ரூ.300க்கு ரீசார்ஜ் செய்தும் ரூ.91 அல்லது அதற்கும் மேல் ஆட்-ஆன் உள்ளிட்டவற்றை பெற முடியும். 
 
ரூ.400 மதிப்புடைய வவுச்சர்கள் உடனடியாக வாடிக்கையாளர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகிறது. இதனை மைஜியோ செயலியின் வவுச்சர்கள் பிரிவில் வாடிக்கையாளர்கள் உறுதி செய்து கொள்ள முடியும். ஜியோ வழங்கும் \'மோர் தேன் 100% கேஷ்பேக்\' (Jio More than 100% Cashback Offer) தொகையை குறிப்பிட்ட ஜியோ எண்ணிற்கு அதிகபட்சம் ஐந்து ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். 
 
 
இந்த சலுகையின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ அமேசான் பே, மொபிகுவிக், போன்பெ, பீம் மற்றும் ஃபிரீசார்ஜ் உள்ளிட்ட டிஜிட்டல் வாலெட் சேவைகளுடன் இணைந்திருக்கிறது. இவை வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் ரூ.300 மதிப்புடைய உடனடி கேஷ்பேக் வழங்குகின்றன. அனைத்து டிஜிட்டல் வாலெட்களிலும் புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
இந்த சலுகை ஜனவரி 31-ம் தேதி வரையிலும், ரூ.3,300 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் சலுகை ரூ.399 அல்லது அதற்கும் அதிகமான தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது வழங்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.