பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை: சலுகை விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை: சலுகை விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

பிளிப்கார்ட் தளத்தின் சிறப்பு மின்சாதன விழா நேற்று துவங்கியது. ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் இதர சாதனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மோட்டோ Z, மோட்டோ Z பிளே, ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், கூகுள் பிக்சல், குரோம்காஸ்ட், டிவி, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இதர சாதனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.  
 
ரூ.5,999க்கும் அதிகமான விலையில் பொருட்களை வாங்கும் போதும், ஸ்டேட் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோருக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் ரூ.1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
 
மோட்டோ Z பிளே ஸ்மார்ட்போன் ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இத்துடன் எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.15,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி5 பிளஸ் ரூ.16,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது, எனினும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
\"\"
 
16 ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 6 தற்சமயம் ரூ.26,490க்கு விற்பனை செய்யப்படுகின்றது. எக்சேஞ்ச் செய்யும் போது அதிகபட்சம் ரூ.13,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது. ஐபோன் 6S ஸ்மார்ட்போன் 32 ஜிபி ரூ.7,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 5S 16 ஜிபி ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.16,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. 
 
ஆப்பிள் போன்றே சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி சாம்சங் ஆன்8 ஸ்மார்ட்போன் ரூ.3000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.12,900 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இத்துடன் ரூ.749 மதிப்புடைய SDHC கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது. 
 
ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி வீட்டு உபயோக சாதனங்களுக்கும் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டின் தள்ளுபடி விற்பனை நாளை வரை நடைபெற இருக்கும் நிலையில் பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.