பி.எஸ்.-IV நின்ஜா 1000 இந்தியாவில் வெளியிடப்பட்டது: விலை மற்றும் முழு தகவல்கள்

பி.எஸ்.-IV நின்ஜா 1000 இந்தியாவில் வெளியிடப்பட்டது: விலை மற்றும் முழு தகவல்கள்

கவாசகி நிறுவனத்தின் 2017 பி.எஸ்.-IV நின்ஜா 1000 இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய நின்ஜா மாடல் பைக் மொத்தம் 20 யுனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
புதிய நின்ஜா 1000 பி.எஸ்.-IV 1043சிசி இன்ஜின் கொண்டுள்ளது. 142PS @ 10,000rpm மற்றும் பீக் டார்கியூ 111Nm @ 7300rpm உடன் 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. நின்ஜா 1000 மின்சாதன உபகரணங்களான, கவாசகி டிராக்ஷன் கண்ட்ரோல் (KTRC), கவாசகி இன்டெலிஜண்ட் ஆண்டி-லாக் பிரேக் சிஸ்டம் (KIBS), பவர் மோட் மற்றும் கவாசகி கார்னர் மேனேஜ்மென்ட் ஃபங்ஷன் (KCMF) உடன் வழங்கப்படுகிறது. 
 
அலுமினியம் பேக்போன் டை ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சஸ்பென்ஷன்கள் 41 மில்லிமீட்டர் இன்வெர்ட்டெட் கேட்ரிட்ஜ் ஃபோர்க் மற்றும் ஸ்டெப்லெஸ் கம்ப்ரெஷன் மற்றும் ரீபவுண்ட் டேம்பிங், ஸ்ப்ரிங் பிரீலோட் வழங்கப்பட்டுள்ளது. 
 
\"\"
 
பிரேக்கிங் வசதிக்கென முன்பக்க 300 மில்லிமீட்டர் பெட்டல்-டைப் ரோட்டார் மற்றும் ரேடியல்-மவுண்ட் 4-பிஸ்டன் மோனோபிலாக் கேலிபர் மற்றும் சிங்கிள் 250 மில்லிமீட்டர் பெட்டல்-டைப் ரோட்டார் மற்றும் சிங்கிள் பிஸ்டன் கேலிப்பர் வழங்கப்பட்டுள்ளது. 
 
முன்பக்கம் 120/70 R17 டையர்களும் பின்புறம் 190/50 R17 டையர்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 19 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 234 கிலோ எடை கொண்டுள்ளது. இதன் சேட்டிள் உயரம் 815 மில்லிமீட்டர் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 130 மில்லிமீட்டர் ஆகும். மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் மற்றும் மெட்டாலிக் கிராஃபைட் கிரே நிறம் கொண்டுள்ளது.
 
இந்தியாவில் புதிய கவாசகி நின்ஜா 2017 பி.எஸ்.-IV மாடலின் விலை ரூ.9,98,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
முன்னதாக கவாசகி நிறுவனத்தின் Z900 பைக் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. கவாசகியின் கூடுதல் உபகரணங்களுடன் வெளியிடப்பட்டதால் விலை அதிகமானது. சந்தையில் போட்டியை ஏற்படுத்தும் விதமாக தனது மோட்டார் சைக்கிள்களில் கூடுதல் உபகரணங்கள் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்த ரக மோட்டோர் சைக்கிளக்களில் கவாசகி டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிப்பிள் மற்றும் டுகாட்டி மான்ஸ்டர் 797 மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. கவசாகி Z900 விலை இந்தியாவில் ரூ.7,68,000 என நிர்ணயம் செய்யப்பட்டது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.