புதிய வகை நகை கலாசாரத்திற்கு மாறும் பெண்கள்

புதிய வகை நகை கலாசாரத்திற்கு மாறும் பெண்கள்

தங்க நகைகள் அணிவதில் அதிக ஆர்வமுடன் திகழும் தற்கால பெண்கள் அதனை தற்கால நவீன வடிவமைப்புகளிலும், தற்கால போக்குக்கு ஏற்ப தேர்வு செய்கின்றனர். முந்தைய நாட்கள் போல் கடைக்கு சென்று ஆய்வு செய்யும் பணிகள் இல்லை. நிறைய பேஷன் புத்தகங்கள், இணையதள புத்தகங்கள் போன்றவை நிகழ்கால டிரெண்ட் என்பதை ஆராய்ந்து ஆலோசனை வழங்குகின்றன. 

அதனை கண்காணித்து, தமது உடல் அழகிற்கு பொலிவூட்டும் நகை எது என்பதனை ஆராய்ந்தும் நகைகளை தேர்வு செய்கின்றன. தற்கால பெண்களின் நகை அணியும் முறைகள் என்பது பலபிரபலங்களின் அணிவகுப்பு, புதிய வடிவமைப்பு என்பதுடன். ஆர்வமூட்டும் அழகுடன் உள்ளதா என்பதை பொருத்து அமைகிறது. அந்த வகையில் தற்போது உள்ள நகைகளின் டிரெண்ட் என்பது சற்று மாறுபட்டவாறு உள்ளது. பாரம்பரிய நகை வடிவமைப்புகளை தாண்டி பிரமாண்ட நகை அலங்காரம் என்றவாறு உள்ளது. 

பெரிய முத்துமாலைகள், அடுக்கடுக்கான நெக்லஸ்கள், பூ வடிவமைப்பிலான பெரிய காதணிகள், ஆடைகளில் சொருகக்கூடிய பெரிய ஆபரண ஊசிகள், மணியமைப்பு காதணிகள் என்றவாறு அனைத்தும் பிரம்மாண்டமான தோற்றத்தடன் கண்கவரும் வகையில் உள்ளன. இந்த நகை அலங்கார அமைப்புதான் பிரபலங்களின் சிவப்பு கம்பள கம்பீர நடையழகை கவுரவிக்கும் விதமாக உள்ளது. இது தற்கால இளம் யுவதியர்களை கவர்ந்து இருப்பதால் அதுவே தற்போதைய டிரெண்ட் என்றவாறு பெரிய வலம் வருகின்றன.

கற்களும் மணிகளும் நிறைந்த மாலைகள்

பெரிய பாந்தமான வடிவிலான ஒற்றை கல் பதக்க தொங்கலுடன் மூன்று வரிசையில் தொங்கும் மணிகளான நெக்லஸ்கள். இத்துடன் கழுத்துடன் இறுக்கி பிடிக்கும் அதே கல் அலங்கார சோக்கர் நெக்லஸ் என உச்ச பட்ச பிரமாண்ட நகை அலங்கார அணிவகுப்பு. அதுபோல் முத்துக்கள் மற்றும் தங்க மணி உருளைகள் இணைந்து பெரிய பட்டவடிவ மாலைகள் மற்றும் நெக்லஸ்கள் பெண்களின் மனதை கவர்கின்றன. மணிமாலைகள் என்பது சரசரமாய் கோர்த்து மூன்று அடுக்குகளாய் இணைக்கப்பட்டு உள்ளது.ஆடைகளில் சொருகக்கூடிய அலங்கார ஊசிகள்

ப்ரூசஸ் என்ற இந்த ஆபரண ஊசிகள் ஜாக்கெட் மற்றும் சேலையை இணைக்க சொருக கூடிய வகையில் உள்ளது. இந்த ப்ரூசஸ்கள் கண்கவர் மணிகள், கற்கள் பொருத்தப்பட்ட பெரிய வட்டம் மற்றும் பூக்கள் வடிவமைப்பில் ஆடைகேற்ற வண்ண சாயலுடன் உருவாக்கப்படுகிறது. நவீன யுவதியர் விரும்பி வாங்கும் ப்ரூசஸ் சிறியதும், பெரியதுமாக கிடைக்கின்றன.

செயின் வடிவ காதணிகள்

தற்கால பெண்கள் பெரிய பிரமாண்ட கற்கள் மற்றும் முத்து பதித்த காதணிகளை தேர்வு செய்கின்றனர். அதுபோல் நீளமான செயின் அமைப்பில் தொங்கும் தோரண காதணிகளும் பிரபலமாக உள்ளது. இது பிரதானமாக பெரிய ஒற்றை நிற கற்கள் பதித்து சுற்றிலும் சிறியதும் பெரியதுமான பிற நிற கற்கள் பதித்து மணிகள் மற்றும் முத்துக்கள் செயின் அமைப்பில் தொங்குகின்றன. அது போல் சாண்டிலியர் காதணிகளும் பெரிய வளைவுகள் மற்றும் அதிக வேலைபாட்டுடன் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவையாவும் தற்கால பெண்களின் விருப்பமான நகையாக உள்ளன.

மஞ்சள் நிறத்தில் நகைகள்

தங்கத்தின் அசல் நிறமான மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும் படியான அதிக வேலைப்பாடுகள் கூடிய நகைகள் பிரபலமாக உள்ளன. இதில் கணினி உதவியுடன் மேம்பட்ட டிசைன்கள் மிக துள்ளியமாக மஞ்சள் உலோக பின்னணியில் ஜொலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. நவீன தங்க நகைகள் என்றவாறு பிரபலமடையும் இந்நகைகள் பாரம்பரிய தங்க நகைகளை விட மாறுபட்டது. ஆனால் அணியும் பெண்களை நவீன மங்கையராய் மாற்றும் திறன் கொண்டது. 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.