புதுமை விரும்பிகளின் பெட்டகமாக திகழும் டிசைனர் நகைகள்

புதுமை விரும்பிகளின் பெட்டகமாக திகழும் டிசைனர் நகைகள்

இளம் வயது மங்கையர் விதவிதமான டிசைனில் நகைகளை அணிந்து பார்ப்பதில் அதிக ஆர்வம் கொள்கின்றனர். உலகம் முழுக்கவே பெண்கள் அணிகின்ற நகைகள் என்பதற்கு ஏற்ப தினசரி புதிய புதிய டிசைன்கள் உருவாக்கப்பட்டு சந்தையில் அறிமுகமாகின்றன. இதில், அத்தனை டிசைன் நகைகளும் தங்க நகைகளாக வாங்கி குவிக்க முடியாது. தினசரி பயன்பாடு மற்றும் சுலபமாய் அணிந்து செல்லக்கூடிய வகையில் அழகிய டிசைனர் நகைகள் வருகின்றன.

டிசைனர் நகைகள் என்பவை மஞ்சள் மற்றும் வெள்ளை உலோகத்திலும், மணிகள், கற்கள், போன்றவையிலும் உருவாக்கப்படுகின்றன. டிசைனர் நகைகள் கல்யாணம், பார்ட்டி, விடுமுறை நாட்கள், பார்மல், கல்லூரி, கேஸ்வல் என்றவாறு வகைப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இதனால் நாம் அதிக சிரமமின்றி நமக்கு டிசைன் நகைகளை தேர்ந்தெடுத்திட முடியும்.

பல வித்தியாசமான டிசைன்கள் டிசைனர் நகைகளில் அணிவகுப்பதுடன், மெல்லியது, பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை, விலை குறைவானது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் அணிந்து சென்று அனைவரையும் கவர முடியும். தனிப்பட்ட டிசைன் நகையை அணியும்போதுதான் அனைவர் பார்வையும் நம் மீது விழும்.

கல்லூரி பெண்களுக்கு ஏற்ற வண்ண மணி காதணிகள் :

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ண ஆடைக்கு ஏற்ப அணிய கூடிய வாறு வண்ண மணிகள் கோர்க்கப்பட்ட மாட்ட கூடிய காதணிகள் உள்ளன. ஒற்றை மணிகள் அல்லது பல வண்ண மணிகள் அழகுற கோர்க்கப்பட்ட காதணிகள் அதாவது, வட்ட வடிவ கம்பி மேற்பகுதியில் இறுக்கமான வண்ணமணிகள் கோர்க்கப்பட்டு அதன் கீழ் தொங்கும் அமைப்பில் நிறைய மணிகள் வளைத்து வளைத்து கோர்க்கப்பட்டுள்ளன.

\"\"

அதேபோல் பெரிய வட்டம் அதனுள் சிறு வட்டம் கொண்ட அமைப்பில் பெரிய வட்டத்தில் உள்பகுதியில் மட்டும் பல வண்ண மணிகள் வரிசை சீராய் கோர்க்கப்பட்டு உள்ளன. வெள்ளை முத்துகள் வளையத்தில் கோர்த்து அதன் நடுவே சிறு கம்பி தொங்கல் தொங்க விடப்பட்டுள்ள காதணியும் சூப்பர். கல்லூரி பெண்கள் அணிகின்ற காதணிகள் அனைத்தும் மாட்டுகின்ற வடிவில் கூக் இணைப்புடன் உள்ளன. எனவே, தினசரி கழற்றி மாற்றுவது சுலபம்.

கற்கள் பதித்த டிசைனர் நகைகள் :

கேஸ்வல் நகைகள் என்பதில் பெரும்பாலும் வெள்ளை கற்கள் அதிகம் பதியப்பட்ட டிசைனர் நகைகள் உள்ளன. இதயம், பூக்கள், இலை, திலகம் போன்ற அமைப்பில் சுற்றிலும் வெள்ளை கற்கள் பதித்து, அதன் நடுவே ஒற்றை வண்ண கல் (அல்லது) சிறு வண்ண கற்கள் பதித்த காதணிகள், மொட்டு மற்றும் மலர்கள் பூத்த அமைப்பிலான பாதி கற்கள் பதித்த வளையல், பெரிய கல் பதக்க செயின்கள் போன்றவை உலா வருகின்றன. கேஸ்வல் டிசைனர் நகைகள் வண்ண மற்றும் வெள்ளை கற்கள் பின்னணியிலும் வெள்ளை மற்றும் உலோகத்தில் உருவாக்கப்படுகிறது.

புத்தம் புதிய வடிவில் பார்மல் டிசைன் நகைகள் : 

பார்மல் டிசைனர் நகைகள் என்பவை பாரம்பரிய நகை வடிவமைப்பில் இருந்து சற்று மாறுபட்ட வித்தியாசமான அளவுகள் மற்றும் கோணங்கள் கொண்ட நகை அமைப்பாய் உள்ளன. கழுத்தில் அணியும் மாலைகள் பெரிய அகல வரிசை கம்பி இணைப்புகள் தொங்க விடப்பட்டும், அதில் பென்டன்ட்-ஆக பட்டையான தோரண அமைப்பில் வளைவாக, நெருக்கமாக உள்ள செயில்கள், வண்ண கல் பூ காதணிகள், வித்தியாசமான அமைப்பிலான பிரேஸ்லெட்கள் என அனைத்தும் புதுமை விரும்பிகளின் நகை பெட்டகமாக உள்ளன. 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.