புதுவரவு: எதிர்பார்ப்புகளை முறியடித்து, முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் போர்ட்

புதுவரவு: எதிர்பார்ப்புகளை முறியடித்து, முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் போர்ட்

சுசுகி நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்விஃப்ட் 2017 ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் விழாவுக்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிரான்க்ஃபுர்ட் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் விழா துவக்கத்திற்கு முன்னதாகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் முழுமையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி முன்பக்க பம்ப்பர் சாதாரண ஸ்விஃப்ட மாடல்களுடன் ஒப்பிடும் போது தலைசிறந்த தோற்றத்தை கொண்டுள்ளது. முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட பம்ப்பர் மட்டுமின்றி இத்தாலிய எஸ்கியூ கொண்ட அலாய் வீல் மற்றும் அழகிய கிரில் வழங்கப்பட்டுள்ளது.
 
ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலில் நான்கு-கதவுகள் கொண்டிருக்கும், முன்னதாக வெளியான இரண்டு மாடல்களில் இரண்டு கதவுகளே வழங்கப்பட்டது. வழக்கமான ஹேன்ட்லிங் மற்றும் பாடி கண்ட்ரோல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய HEARTECH தளம் கொண்டிருப்பதால் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் முந்தைய மாடல்களை விட எடை குறைவாக இருக்கும். 
 
புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் இன்ஜின் சார்ந்து எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், புதிய மாடலில் 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் கசோலின் மோட்டார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்ற இன்ஜின் சுசுகி விடாரா எஸ் மாடலில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
தற்சமயம் விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட் மாடல்களை விட ஸ்விஃப்ட் ஸ்போர்ட் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் அபார்த் 500, ஃபோர்டு ஃபியஸ்டா, ரெனால்ட் க்ளியோ, ஃபோக்ஸ்வேகன் UP GTI மாடல்களுக்கு போட்டியாக அமையும். இந்த மாடல் கார் இந்தியாவில் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.