புத்தம் புதிய ஹூன்டாய் வெர்னா: ஐந்து புதிய அம்சங்கள்

புத்தம் புதிய ஹூன்டாய் வெர்னா: ஐந்து புதிய அம்சங்கள்

இந்தியாவில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூன்டாய் தனது புத்தம் புதிய வெர்னா மாடல் காரினை ஆகஸ்டு 22-ம் தேதி வெளியிட இருக்கிறது. புதிய வெர்னா மாடல் கார்களுக்கான முன்பதிவுகள் ஹூன்டாய் விற்பனை மையங்களில் துவங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.25,000 மட்டும் செலுத்தி 2017 ஹூன்டாய் வெர்னா மாடலை முன்பதிவு செய்ய முடியும். 
 
ஹூன்டாய் வெர்னா 2017 K2 எனும் பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. உயர்-ரக ஸ்டீல் மூலம் தயாராகியுள்ள ஹூன்டாய் வெர்னா முந்தைய மாடல்களை விட உறுதியாக உள்ளது.
 
 
- வடிவமைப்பு:
 
 
ஐந்தாம் தலைமுறை ஹூன்டாய் வெர்னா பார்க்க பழைய தோற்றம் கொண்டிருப்பது போன்று காட்சியளித்தாலும், புதிய மாடல் K2 எனும் பிளாட்ஃபாரம் மூலம் உருவாகியுள்ளது. அதிக உறுதியான ஸ்டீல் மூலம் உருவாகியிருப்பதால் புதிய வெர்னா கடினமாக உள்ளது. புதிய பாடி வடிவமைப்பு மற்றும் பிளாட்ஃபார்ம் உள்ளிட்டவை NVH அளவுகளை குறைக்க வழி செய்கிறது. 
 
\"\"
 
- புதிய சஸ்பென்ஷன்:
 
ஹூன்டாய் மிட்-சைஸ் செடான் புதிய வகை சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. புதிய சஸ்பென்ஷன் காரை திறம்பட கட்டுப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடல்களில் அதிவேகமாக செல்லும் போது ஏற்பட்ட அனுபவம் புதிய சஸ்பென்ஷன் அமைப்பு மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. 
 
- வெர்னா 2017 இன்ஜின்:
 
புதிய வெர்னா மாடலில் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 123bhp, 151NM டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இத்துடன் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் மாடலும் வழங்கப்படுகிறது. டீசல் இன்ஜின் 128bhp, 260NM செயல்திறன் கொண்டுள்ளது. அறிமுகம் செய்யப்படும் போது இரண்டு வித இன்ஜின் மாடல்கள் மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இத்துடன் முந்தைய மாடல்களை விட அதிக மைலேஜ் தரும் படி ARAI மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 17.7 கிலோமீட்டர், பெட்ரோல் ஆட்டோமேடிக் 15.92 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் டீசல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 24.75 கிலோமீட்டர், டீசல் ஆட்டோமேடிக் லிட்டருக்கு 21.02 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும்.  
 
\"\"
 
- புதிய டிரான்ஸ்மிஷன்கள்:
 
இன்ஜின்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், வெர்னா மாடலின் இரண்டு இன்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், பெட்ரோல் மாடல்களில் 5-ஸ்பீடு மேனுவல் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பழைய 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் இம்முறை 6-ஸ்பீடு டார்கியூ கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக்ஸ்-ஆக மாற்றப்பட்டுள்ளது. 
 
- மாற்றங்கள்:
 
புத்தம் புதிய வெர்னா முந்தைய மாடல்களை விட 65 மில்லிமீட்டர் நீளமாகவும், 29 மில்லிமீட்டர் அகலமும், வீல்பேஸ் 30 மில்லிமீட்டர் அளவு நீளமாக இருக்கிறது. தற்சமயம் 4,440 மில்லிமீட்டர் நீளமும், 1,729 மில்லிமீட்டர் அகலமும், 2,600 மில்லிமீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ளது. இதன் பின்பக்க ஹெட்ரூம் 3 மில்லிமீட்டர் 948 மில்லிமீட்டர் அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பூட்ஸ்பேஸ் மற்றும் ஃபியூயல் டேன்க் முறையே 20 லிட்டர் மற்ரும் 2 லிட்டர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 

 

புதிய ஹூன்டாய் வெர்னா 2017 ஹோன்டா சிட்டி, மாருதி சியாஸ், ஸ்கோடா ரேபிட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வென்டோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.