புரதம், கால்சியம், நோய் எதிர்ப்புச் சக்தி தரும் முதியோருக்கான ஆரோக்கிய உணவுகள்!

புரதம், கால்சியம், நோய் எதிர்ப்புச் சக்தி தரும் முதியோருக்கான ஆரோக்கிய உணவுகள்!

 

 

 

 

‘கல்லைத் தின்றாலும் கரையும் வயது’ என்று பொதுவாக ஒரு சொலவடை உண்டு. இளவயதுடைய யாராவது எனக்கு அந்த உணவு ஒத்துக்கொள்ளாது, இந்த மாதிரியான உணவுகள் ஒத்துக்கொள்ளாது என்று சொல்லும்போது பயன்படுத்தப்படும் சொலவடை அது. ஆனால், வயதான முதியவர்களுக்கோ அப்படி அல்ல.

\"முதியோருக்கான

கரைகின்ற பொருள்களைத் தின்றால்கூட அது கல் போன்று கிடந்து பல்வேறு தொந்தரவுகளைத் தந்துவிடும். அதிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உணவு விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த மாதிரியான உணவுகளை \"மருத்துவர்உட்கொள்ள வேண்டும் என்று முதியோர் நல மருத்துவர் நடராஜனிடம் கேட்டோம்.

\"வயதான பின்பு பசி குறையும், ருசி குறையும், ஆனால் உணவின் தரம் குறையக் கூடாது. உணவின் அளவு குறைவாக இருந்தாலும், நல்ல ஆரோக்கியமான, சத்துகள் நிறைந்த உணவுகளைத்தான் உண்ண வேண்டும்.

புரதம் நிறைந்த உணவுகள் :

வயதானவர்களின் உடலில் புரதச்சத்து குறைவதால் உடல் எடை இழந்து காணப்படுவார்கள். எனவே புரதச்சத்து நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். பருப்பு வகைகளில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. எனவே அனைத்து வகையான பருப்பு வகைகளையும் உணவில் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உடலுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கும். காளான் உயர்ரக புரதச்சத்து நிறைந்த உணவு. அதேபோல் சோயா, முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவையும் புரதம் நிறைந்த உணவுகள். இவற்றை வாரம் இருமுறையாவது கண்டிப்பாக உட்கொள்ளவேண்டும்.

\"பருப்பு

கால்சியம் நிறைந்த உணவுகள்:

வயதானவர்களுக்குக் கால்சியம் சத்துகள் மிக அவசியமானவை. கால்சியம் அதிகமாக உள்ள பால், தயிர், கீரை வகைகள், மீன் வகைகள் ஆகியவற்றைக் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.

\"கீரை

கோதுமை மற்றும் சிறுதானியங்கள்:

மூன்று வேளையும் அரிசி உணவுகளை உட்கொள்வதால், அதிகமாக வெயிட் போட வாய்ப்புள்ளது. இதனாலும் பல்வேறு பாதிப்புகள் உண்டாகின்றன. எனவே, வயதானவர்கள் அரிசி உணவுகளை உட்கொள்ளவதைப் பெரும்பாலும் குறைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக கோதுமை மற்றும் சிறுதானியங்களையே உட்கொள்ள வேண்டும்.

சிறுதானியங்களில் கால்சியம் மற்றும் சுண்ணாம்புச் சத்துகள் அதிகமாக இருப்பதால், எலும்புகள் மிகுந்த உறுதியாகும்.

நார்ச்சத்துகள் அதிகமாக இருப்பதால், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் நெருங்காது. இது தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

\"சிறுதானியங்கள்\"

தண்ணீர் மிக அவசியம்:

உடலுக்குத் தேவையான அளவு நீர் அருந்த வேண்டும். உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இள வயதுடையவர்களுக்குத் தாகத்தின் மூலம் உடலின் நீர்த் தேவையை அவர்களின் உடலே அறிவுறுத்தும். ஆனால், வயதானவர்களுக்குத் தாகம் ஏற்படுவது குறைந்துவிடும். எனவே தாகம் வந்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றில்லை, நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் நீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். இதய பாதிப்புள்ளவர், சிறுநீரகப் பாதிப்புள்ளவர்கள் மட்டும் மருத்துவரின் அறிவுரையோடு குடிக்க வேண்டும்.

\"தண்ணீர்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க...

வயதானவர்கள் கண்டிப்பாகப் பழங்கள் உண்ண வேண்டும். கண்டிப்பாக வெறும் வயிற்றில்தான் உண்ண வேண்டும். உணவு எடுத்துக்கொண்ட பின்பு பழங்கள் சாப்பிட்டால் எந்தப் பயனும் கிடைக்காது. காலை நேரங்களிலோ அல்லது மாலை நேரங்களிலோ உண்ண வேண்டும். 

வயதானவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகமாக உண்ண வேண்டும். இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது. இது தவிர இஞ்சி, பூண்டு, தயிர், பாகற்காய், பாதாம் பருப்பு போன்றவையும் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகின்றன.

\"சிட்ரஸ்

மலச்சிக்கலைத் தடுக்க...

பாகற்காய், புடலங்காய், காலிபிளவர், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் போன்ற நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை உட்கொண்டால் மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் வராமல் காத்துக்கொள்ளலாம்.

\"பாகற்காய்\"

மறதியைத் தடுக்க...

உலர் திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, முளைகட்டிய கோதுமை, முட்டையின் மஞ்சள் கரு, வாழைப்பழம், வெங்காயம், பட்டை, வல்லாரைக் கீரை ஆகியவற்றை உட்கொள்ளும்போது மறதியைத் தவிர்க்கலாம் \" என்கிறார்.

\"உலர்

இது போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் முதுமையில் ஏற்படும் பல்வேறு தொந்தரவுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். நீண்ட ஆயுளோடு வாழலாம்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.