பெண்களின் அழகும்.. அலங்காரமும்..!

பெண்களின் அழகும்.. அலங்காரமும்..!

பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள ஒப்பனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆடை, சிகை அலங்காரத்துக்கும் மெனக்கெடுவார்கள். ஒப்பனைக்கு அதிக அக்கறை செலுத்தாமலேயே அழகிய தோற்றத்தில் பிரகாசிக்கலாம்.

* ஆடைகளை தேர்ந்தெடுப்பதற்கு காட்டும் ஆர்வம் அதனை நேர்த்தியாக உடுத்துவதிலும் வெளிப்பட வேண்டும். ஒருசிலர் இறுக்கமான உடைகளை தேர்ந்தெடுப்பார்கள் அல்லது மிகவும் தளர்வான உடைகளை அணிவார்கள். நவநாகரிக உடையாக இருந்தாலும், கலாசார உடையாக இருந்தாலும் தோற்றத்தை அழகாக காண்பிக்குமாறு அமைய வேண்டும். தளர்வான, இறுக்கமான ஆடைகள் எடுப்பான தோற்றத்திற்கு பங்கம் ஏற்படுத்திவிடும். நேர்த்தியாக அணிவதுதான் ஆடைக்கும், தோற்றத்திற்கும் அழகு சேர்க்கும்.

* அழகாக அலங்கரிப்பதற்கும், அதிகமாக அழகுபடுத்திக்கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அடுத்தவர்களின் விமர்சனத்திற்கு இடம் கொடுக்குமாறு அமைந்துவிடக் கூடாது. அணியும் அணிகலன்கள், ஒப்பனைகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு அழகாகவும் இருக்க வேண்டும். அதிகமான அணிகலன்கள்தான் மற்றவர்கள் மத்தியில் மதிப்பை உயர்த்தும் என்றில்லை. உடுத்தும் ஆடைக்கு பொருத்தமாக அமையும் எளிமையான அணிகலன்கள்கூட கூடுதல் அழகு சேர்க்கும்.

\"\"

* கண் இமைகள், புருவங்களை நேர்த்தியாக ஒப்பனை செய்தாலே பார்க்க அழகாக தெரியும். முகத்தோற்றத்திற்கும் பொலிவு கூடிவிடும்.

* முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி வர வேண்டும். அவை முகத்தில் படியும் தூசுகள், அழுக்குகளை அகற்றி சருமத்துக்கு பிரகாசம் சேர்க்கும். தூங்க செல்லும் முன்பு கண்டிப்பாக முகம் கழுவ வேண்டும். அது முகத்தில் உள்ள நுண் துளைகளில் அழுக்கு படியாமல் பாதுகாத்து முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள வழிவகுக்கும்.

* வாரம் இருமுறையாவது தலைக்கு ஷாம்பு போட்டு குளித்து வந்தால் தலைமுடி எண்ணெய் பசையின்றி பொலிவுடன் காட்சி தரும்.

\"\"

* தலைமுடியின் நுனிப்பகுதிகளை குறிப்பிட்ட இடைவெளியில் கத்தரித்துவர வேண்டும். அவை தலைமுடி பிளவு, உதிர்வு பிரச்சினைகளை கட்டுப்படுத்தும்.

* சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க ‘சன் ஸ்கீன்’ பயன்படுத்தி வரலாம். அவை சூரிய கதிர்களின் ஆதிக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.

* காலையில் மிதமான சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வருவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். சருமத்திற்கும் நலன் சேர்க்கும். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.