பெண்களை கவரும் வண்ணமயில் ஆபரணம்

பெண்களை கவரும் வண்ணமயில் ஆபரணம்

பெண்களை வர்ணிக்கும்போது வண்ணமயிலோடு ஒப்பிட்டு புகழ்வர். அந்த கையில் அவர்களது ஆடைகள், நகைகள் பெரும்பாலும் பயன்படுத்தும் பல பொருட்கள் அனைத்திலும் மயில்கள் பிரதான வடிவமைப்பு பொருளாக அலங்கரிக்கின்றன. குறிப்பாக பெண்கள் அணியும் தங்க நகைகளில் மயில் டிசைன் நகைகள் என்றவாறு பிரத்யேக அணிவகுப்பு நகைகள் உள்ளன. இவை மயில்களின் அலங்கார அணிவகுப்பு, வண்ண தோகை அலங்காரம், அழகிய வளைவுகள் என்றவாறு கைநுணுக்க வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகின்றன.

பெண்களின் அழகிய வளைவு நெளிவுக்கு ஏற்ற அலங்கார நகைகள் விதவிதமான மயில்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. பழங்கால ஆண்டிக் நகைகள் முதல் நவீன கால் வடிவமைப்பு நகைகள் வரை அனைத்திலும் மயில்களின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.

மயில்கள் அணிவகுக்கும் ஆன்டிக் ஆரம் :

ஆன்டிக் நகைகள் பெரிய பிரம்மாண்ட தோற்றத்துடன் காணப்படும் நகை. அதன் வடிவங்கள் சிற்ப வேலைப்பாடு பழமையின் பிரதான சின்னங்களுடன் கூடுதல் உழைப்புடன் காணப்படுபவை. ஆன்டிக் நகைகள், பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷ நகையாக உள்ளன. மயில்கள் இருபுறமும் வரிசை கிரமமாய் தோகை விரித்தப்படி அணிவகுக்க அதன் இரு பெரிய மயில்கள் தொங்குவது போன்ற பதக்க அமைப்பு, பதக்க ஓரப்பகுதியில் இலை மோடிப் கொண்டவாறும், கீழ் மணி உருளைகள் தொங்குகின்றன. பதக்கத்தின் நடுப்பகுதியில் கற்கள் பதித்த மயில் வண்ணமாய் நடனமிடுகிறது. ஆன்டிக் மயில் ஆரத்தில் எட்டு தங்க மயில் வடிவங்களும், ஒன்பதாவதாக கல் மயில் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. மயில்களின் கூடாரமாய் திகழும் இந்த ஆரம் பெண்களின் கழுத்திற்கு மயில் தோரணமாய் அலங்கரிக்கின்றன.

\"\"

வண்ணமயமான நாக்‌ஷி- போல்கி மயில் ஆரங்கள் : 

தங்கத்தில் அழகிய தோகையுடன் கூடிய மயில் உருவத்தின் ஓரப்பகுதி, தலை பகுதி, தோகைப்பகுதியில் அன்-கட் டைமண்ட் மற்றும் வண்ணக் கற்கள் மணிகள் பதித்து மயிலை அழகுற வடிவமைத்து உள்ளன. இந்த மயில்கள் இருபுறமும் வண்ணமா ஜொலிக்க நடுவே பெரிய இருமயில்கள் வளைந்தவாறு தொங்கும் அமைப்பில் கற்கள், மணிகள் தொங்க விடப்பட்டபடி உள்ளன. பெரிய வெள்ளைக்கற்கள் மற்றும் மோல்கி வடிவமைப்பில் பெரிய அகலமான ஆரங்கள் கைநேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இருமயில் தோகைகளுடன் இணைந்த ஆரமும் அற்புதம்.

பச்சை வண்ண மயில் காதணிகள் :

மயில்கள் வெள்ளை மற்றும் பச்சை கற்கள் பதித்தவாறு வளைந்தவாறும் தொங்கும் அமைப்பிலும் உள்ள காதணிகள் அழகோ அழகு. இதில் தோகை பகுதியில் பச்சை நிற கற்கள் பதித்தவாறு கீழ் பகுதியும், கொண்டை மற்றும் முகப்பகுதியில் வேறு வண்ண கற்கள் காதுடன் பொருந்தும் பகுதியாகவும், உடல் பகுதியில் வெள்ளை கற்கள் பதிய விடப்பட்டுள்ளன. தோகைகள் சுருள் அமைப்பு, நீள் அமைப்பு, வளைந்த அமைப்பு பல வகை வடிவத்துடன் மயில்கள் மாறுபட்டவாறு டிசைன் செய்யப்பட்டுள்ளன.

\"\"

இரட்டை மயில்கள் நடனமாடும் வளையல்கள் :

முழுக்க முழுக்க தங்கத்தில் சிற்ப வேலைப்பாடு கொண்ட ஆன்டிக் வளையல்கள் அகலமாய், இடையில் கொடிகள் ஓடுவது போன்று டிசைன் செய்யப்பட்டு உள்ளன. அதுபோல் கம்பி வளையல் அமைப்பின் நடுப்பகுதியில் மட்டும் கல் பதித்த மயில்கள் நடனமாடுவதுபோன்றும், தோகையுடன் ஜொலிப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் முத்தாய்ப்ாய் தங்க உடல் பகுதியில் கொண்டை, கண், தோகை அனைத்தும் மாறுபட்ட வண்ணத்தில் எனாமல் பூசப்பட்ட மயில் வளையல்கள் வர்ணஜாலம் நிகழ்த்துகின்றன. அதுபோக ‘பென்டன்ட் எனும் பதக்க அமைப்புகள் தனிப்பட்ட டாலர் அமைப்பாய் மயில் உருவத்துடன் கிடைக்கின்றன. 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.