பெண்கள் மனஅழுத்தத்தில் இருந்து மீளும் வழி

பெண்கள் மனஅழுத்தத்தில் இருந்து மீளும் வழி

இன்றைய அவசர யுகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய ஆண்கள் பார்க்கும் அனைத்துப் பணிகளையும் பெண்களும் மேற்கொள்கின்றனர்.

எனவே, ஆண்களைப் போலவே பெண்களும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

இந்நிலையில், பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ளும் பெண்கள் மனஅழுத்தத்தில் இருந்து தப்பிக்கலாம் என ‘பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னல் ஓபன்’ நடத்திய ஆய்வில் தெரியவந்திருக் கிறது.

 

\"\"

அதன்படி, ஒரு நாளைக்கு ஏழு முறை பழம், காய்கறிகள் சாப்பிடுபவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 23 சதவீதம் வரை குறையும் என கூறப்படுகிறது. இந்த ஆய்வு 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 60 ஆயிரம் பெண்களுக்கு நடத்தப்பட்டது.

தினசரி ஐந்து முதல் ஏழு முறை வரை பழம், காய்கறி சாப்பிடும் பெண்களுக்கு மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் குறைவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, பழங்களும் காய்கறிகளும் ஆண்களைவிட பெண்களுக்கு நல்ல பலன் கொடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.