பெண்கள் மனங்கவரும் வண்ணமயமான ஹேண்ட்பேக்

பெண்கள் மனங்கவரும் வண்ணமயமான ஹேண்ட்பேக்

நாகரிக உலகில் அனைத்து தரப்பு பெண்களும் வெளியில் செல்லும்போதே ஏதேனும் ஒரு வகை பேக்குகளை எடுத்து செல்வது வழக்கமாகிவிட்டது. ஹேண்ட்பேக் என்பது ஒவ்வொரு வடிவிலும், ஒவ்வொரு தயாரிப்புப் பொருள் அடிப்படையிலும் பாகுபடுத்தப்படுகின்றன. உலகளவில் பிரசித்திபெற்ற விலையுயர்ந்த ஹேண்ட்பேக் முதல் சாதாரணமாய் நடைபாதை கடைகளில் கிடைக்கும் ஹேண்ட்பேக் வரை அனைத்துமே அழகும் அற்புதமும் நிறைந்தவாறே உருவாகின்றன.

ஹேண்ட்பேக் என்பதில் அலுவலக பயன்பாடகள் தவிர்த்து சாதாரணமான தினசரி பயன்பாடு, விழாவிற்கு ஏற்றது என்றவாறு பலரகங்கள் உள்ளன. அதற்கென தனித்தனி பெயர்களும், வித்தியாசமான வடிவமைப்பும் கூறப்படுகின்றன. கையில் பிடித்து எடுத்து செல்ல ஏதுவான கிளெட்ச், கையில் மாட்டக்கூடிய டைட்பேக், தோள் பகுதியில் மாட்டக்கூடிய ஜோலாபேக்ஸ், கையில் சிறிய கைப்பிடியுடன் பிடிக்கக்கூடிய பொட்லி பேக்ஸ் என்பதுடன் லெதர் மற்றும் மூங்கில் பேக்குகளும் விற்பனைக்கு வருகின்றன.

இவையனைத்தும் நவீனயுவதியர்கள் எடுத்துச் செல்லக்கூடிய வடிவமைப்பு, வேலைப்பாடு, வண்ண சேர்க்கை என்பதுடன் அலங்கார பேக்குகளாகவே உருவாகின்றன.

தோள்களில் தொங்கும் வண்ணமயமான ஜோலா பேக்:-

ஜோலா பேக் என்பது பெரும்பாலும் துணிகளில் உருவாக்கப்படுபவை. வடஇந்திய பாரம்பரிய எம்பிராய்டரி மற்றும் கைவினை வேலைப்பாட்டுடன் உருவாகும் இந்த பேக் அனைத்து பெண்களும் விரும்பும் வகையிலானது.

வி.வடிவில் வெட்டப்பட்ட பேக்-யின் திறப்பு பகுதியுடன் மேல்பகுதி தொங்கும் அமைப்பு தைக்கப்பட்டது இணைத்து கட்டப்பட்டு இருக்கும். பேக்-யின் அகலமான பகுதியில் இராஜஸ்தான் எம்பிராய்டரி மற்றும் கண்ணாடி வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டிருக்கும். தினசரி மற்றும் கல்லூரி பயன்பாட்டிற்கு ஏற்ற ஜோலா பேக் அடர்த்தியான வண்ண சாயலில் உலா வருகின்றன.

கையில் ஒய்யாரமாய் தொங்கும் டோட் பேக்:-

ஸ்டைலாக கையை மடக்கி பிடித்தபடி நடந்து செல்லும் போது முன்கை பகுதியில் தொங்கிய படி எடுத்து செல்லக்கூடியதே டோட் பேக். இது துணி பிரிண்ட் செய்யப்பட்டது. சணல் இழையில் செய்யப்பட்டது என்றவாறு பல பிரிவுகளில் கிடைக்கின்றன. நளினமாக கையில் பிடிக்கக்கூடிய கைப்பிடியுடன் சதுரம் மற்றும் செவ்வக அமைப்பில் உருவாக்கப்படுகிறது போட் பேக். பல வண்ணங்களில் பிரிண்ட் மற்றும் உப்பளான அமைப்பில் இப்பேக்குகள் அழகுற வடிவமைக்கப்படுகிறது.

சுருக்குபையின் நவீன வடிவம் பொட்லி பேக்ஸ்:-

பழங்கால சுருக்குபைகள் இன்றைய நாளில் அழகிய ரிட்டர்ன் கிப்ட் பேக்குகளாக உருமாறின. அதில் மேலும் அழகிய மேம்படுத்தப்பட்ட பெண்கள் எடுத்துச் செல்லக்கூடிய பொட்லி பேக்குகளை உருமாற்றம் பெற்றுவிட்டன. பட்டு துணியில் சரிகை மற்றும் மணி வேலைப்பாட்டுடன், மணிகள் கோர்க்கப்பட்ட கைப்பிடி, சரிகை நூல்கயிறு, கல்பதக்கும் என்றவாறு பல கைவினை வேலைப்பாட்டுடன் பொட்லி பேக்ஸ் உலா வருகின்றன.

இதில் இறுக்க கட்டக்கூடிய கயிறு அமைப்பு மற்றும் ஜிப் மூலம் திறக்கக்கூடிய அமைப்பு என்றவாறும் கிடைக்கின்றன. பண்டிகை மற்றும் குடும்ப விழாக்களுக்கு எடுத்து செல்லக்கூடிய கண்கவர் கலர்புல் பேக்.

நீளமாக தொங்கும் ஸ்லிங் பேக்:-

தோள்பட்டை பகுதியிலிருந்து இடுப்பின் கீழ் பகுதிவரை நீளமாக தொங்கக்கூடிய வகையிலான ஸ்லிங் பேக் மெத்தென்ற வெல்வெட் மற்றும் வண்ண துணிகள் மேற்பகுதி ஒட்டியவாறு சதுர அமைப்பில் வருகின்றன. இருபக்க பகுதிகளிலும் வேலைப்பாடும், தொங்கும் கயிறு அமைப்புகள் கம்பி மற்றும் மணிகள் உள்ளவாறு உள்ளன. கேஸ்வலாக அணியக்கூடிய வகையில் ஸ்லிங் பேக் உள்ளன. 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.