பொருட்கள் தொலைந்தாலும் இனி கவலை இல்லை: இதோ வந்துவிட்டது ioTracker!

பொருட்கள் தொலைந்தாலும் இனி கவலை இல்லை: இதோ வந்துவிட்டது ioTracker!

விலையுயர்ந்த பொருட்கள் தொலைந்துவிட்டால் அவற்றினை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகும்.

பல சந்தர்ப்பங்களில் மீளவும் கிடைக்காமலே போய்விடும்.

இப்பிரச்சினையை தவிர்ப்பதற்கு ioTracker எனும் GPS சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

17 கிராம்கள் மட்டுமே எடையுள்ள இந்த சாதனத்தினை பொருட்களுடன் இணைத்துவிட்டால் போதும். அப்பொருட்கள் இருக்கும் இடத்தினை மொபைல் சாதனத்தின் ஊடாக கண்காணித்துக்கொண்டிருக்க முடியும்.

எதிர்வரும் மே மாதம் முதல் இச்சாதனம் விற்பனைக்கு வருகின்றது.

இதனை இணையத்தளம் ஊடாகவும், ஐபோன்கள் மற்றும் அன்ரோயிட் சாதனங்களின் உதவியுடனும் பயன்படுத்த முடியும்.

அலாரம் வசதி தரப்பட்டுள்ளதுடன், மின்னஞ்சல் ஊடாக எச்சரிக்கை செய்திகளை அனுப்பும் வசதியும் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

மேலும் இதில் 2 வருடங்களுக்கு மேலான பாவனைக் காலத்தினைக் கொண்ட மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விலையானது 89 யூரோக்கள் ஆகும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.