போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அதிரடி அறிவிப்பு

போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அதிரடி அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் விதமாக பாரதி ஏர்டெல் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரூ.199 மற்றும் அதற்கும் அதிக தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்வோருக்கு உண்மையான அன்லிமிட்டெட் அனுபவத்தை வழங்குவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.
 
புதிய அறிவிப்பை தொடர்ந்து அதிவேக டேட்டா அளவு பயன்படுத்தியதும், டேட்டா வேகம் 128Kbps ஆக இருக்கும், பிஎஸ்என்எல் ஏற்கனவே இதே வேகத்தில் டேட்டா சேவையை வழங்குகிறது, சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ தினசரி பயன்பாட்டு அளவை கடந்ததும் டேட்டா வேகம் 128Kbps இல் இருந்து 64Kbps ஆக குறைக்கப்பட்டது. 
 
மார்ச் மாதம் ஏர்டெல் அறிவித்த ரூ.995 சலுகையில் முதல்முறையாக உண்மையான அன்லிமிட்டெட் சேவையை வாய்ஸ் கால் சேவைகளில் அறிமுகம் செய்தது. ஏர்டெல் வாடிக்கையாளர்களில் ரூ.199 மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட சலுகையை பயன்படுத்துவோர் தங்களின் தினசரி டேட்டா அளவு நிறைவுற்றதும் 128Kbps வேகத்தில் டேட்டா பயன்படுத்த முடியும். 
 
கோப்பு படம்
 
இதனால் தினசரி டேட்டா அளவு கடந்ததும் கூடுதல் டேட்டா வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவை கடந்ததும், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் டேட்டா அளவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. பிராட்பேன்ட் சேவையில் குறிப்பிட்ட அளவை கடந்ததும் டேட்டா வேகம் 512Kbps ஆக மாற்றப்படுகிறது. 
 
ஏர்டெல் புதிய அறிவிப்பு தினசரி டேட்டா வழங்கப்படும் சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும், இதனால் வழக்கமான இன்டர்நெட் பேக் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும், கட்டணம் வசூலிக்கப்படும். புதிய சலுகையை பெற புதிதாய் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, ஏற்கனவே ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களுக்கு டேட்டா வேகம் தானாக 128Kbps ஆக மாற்றப்படும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.