மங்கோலியா விடுதலை பெற்ற நாள் மாரச் 13- 1921
மங்கோலியா உலகின் இரண்டாவது பெரிய நிலங்களால் சூழப்பட்ட நாடாகும். இது ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் ரஷ்யாவும் தெற்கில் சீனாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் அரசியல் அமைப்பு நாடாளுமன்றக் குடியரசு ஆகும். உலான் பாட்டர் எனும் நகரமே இதன் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும்.
மொங்கோலியா பல நாடோடிப் பேரரசுகளால் ஆளப்பட்ட ஒரு நாடாகும். இவ்வாறு இருந்த ஆட்சி 1206-ம் ஆண்டில் செங்கிஸ் கான் கான் என்பவரால் நிறுவப்பட்ட மாபெரும் மங்கோலியப் பேரரசு உருவாகும் வரையே நீடித்தது. யுவான் அரச மரபின் ஆட்சியின் பின் மங்கோலியப் பேரரசு சரிந்துவிட்டது, மீண்டும் மக்கள் நாடோடி வாழ்க்கை வாழ வேண்டியதாய் ஆயிற்று. பதினாறாம் நூற்றாண்டின் பின்பு, மங்கோலியா திபெத்திய பௌத்தத்தால் தாக்கமுற்றது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மங்கோலியாவின் ஒரு பகுதி குயிங் வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது.
1911-ம் ஆண்டில் குயிங் வம்சத்தின் ஆட்சி சரிந்தபோது, மங்கோலிய நாடு சுதந்திரமடைந்த நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. எனினும் அவர்கள் மீண்டும் சண்டை செய்ய வேண்டி ஏற்பட்டது. சோவியத் யூனியன் மங்கோலியர்களுக்கு உதவி செய்தது. 1921-ம் ஆண்டில் மங்கோலிய நாட்டை உலக நாடுகள் சுதந்திர நாடாக ஏற்றுக்கொண்டன. மங்கோலியா இன்றும் கூட முக்கியமான கிராமப்புற நாடு ஆகும். மங்கோலிய செஞ்சிலுவை சங்கம் 1939-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் உலான் பத்தூரில் அமைந்துள்ளது. சோவியத் யூனியனின் கலைப்பின் பின்பு ரஷ்ய நாட்டின் மங்கோலியாவின் மீதிருந்த சுவாரசியம் குறைந்து கொண்டே சென்றது. தற்போது சீனாவும் தென் கொரியாவுமே மங்கோலியாவின் வர்த்தக மற்றும் அரசியல் பங்காளி நாடுகளாக உள்ளனர்.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1943 - ஜெர்மனியப் படைகள் போலந்தின் யூதக் குடியேற்றங்களை அழித்தனர். * 1954 - வியட்நாம் போர்: வியட்நாமின் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தாக்கினர். * 1957 - கியூபா அதிபர் புல்ஜென்சியோ பட்டீஸ்டாவைக் கொல்ல மாணவ தீவிரவாதிகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. * 1969 - அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது. * 1979 - கிரெனடாவில் இடம்பெற்ற புரட்சி ஒன்றில் அதன் பிரதமர் எரிக் கெய்ரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார். * 1992 - கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற (6.8 ரிக்டர் அளவு) நிலநடுக்கத்தில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
* 1996 - ஸ்காட்லாந்து, டன்பிளேன் நகரில் இடம்பெற்ற சூட்டு நிகழ்வில் 16 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளி தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான். * 1997 - அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரின் மீது பீனிக்ஸ் வெளிச்சங்கள் தெரிந்தன. * 2003 - இத்தாலியில் 350,000-ஆண்டு பழமையான மனித அடிச்சுவாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேச்சர் இதழ் அறிவித்தது. * 2007 - 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பம்