மணிக்கு 290 கி.மீ. வேகத்தில் சென்றவரை மடக்கி பிடித்த போலீசார்

மணிக்கு 290 கி.மீ. வேகத்தில் சென்றவரை மடக்கி பிடித்த போலீசார்

இங்கிலாந்து நாட்டின் கேம்ப்ரிட்ஜ்ஷையர் நெடுஞ்சாலையில் 57 வயதான பால் வியாட் தனது பி.எம்.டபுள்யூவில் சென்று கொண்டிருந்தார். பி.எம்.டபுள்யூ S1000RR மாடல் பைக், நெரிசல் இல்லாத நெடுஞ்சாலை என்பதால் சற்றே வேகத்தை அதிகரித்துள்ளார் வியாட். 
 
உயர் ரக ஸ்போர்ட்ஸ் மாடல் பைக் என்பதால் வாகனம் மணிக்கு 290 கி.மீ. வேகத்தில் பால் வியாட் சாலையில் பறந்துள்ளார். நெடுஞ்சாலையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பால் வியாட்டை பிடிக்க கேம்ப்ரிட்ஜ்ஷையர் போலீசார் விரைந்தனர். 
 
\"\"
 
போலீசார் துரத்தியதும் வேகம் பிடித்த வியாட்டை ஒருவழியாக மடக்கி பிடித்த போலீசார், வியாட் தனது வாகனத்தின் பதிவு எண்ணை தவறாக அச்சிட்டிருப்பதை கண்டுபிடித்தனர். பின் வியாட் மீது வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 
முறையற்ற நடத்தைக்காக 14 மாதங்களும், பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதற்கு 14 மாதங்களும், கையில் கத்தி வைத்திருந்ததற்கு இரண்டு மாதங்கள் என மொத்தம் 30 மாதங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.