மத்திய அரசின் சார்பில் சூப்பர் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் திட்டம்: ரூ.4500 கோடியில் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பு

மத்திய அரசின் சார்பில் சூப்பர் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் திட்டம்: ரூ.4500 கோடியில் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பு

மத்திய அரசின் \'மேக் இன் இந்தியா\' திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களில் சூப்பர் கம்ப்யூட்டர்களை தயாரிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. துவக்க நிலை பணிகளாக இரண்டு அங்கங்களில் தேசிய சூப்பர்பகம்ப்யூட்டர் திட்டத்தில் அதிவேக இண்டர்நெட் ஸ்விட்ச் மற்றும் கம்ப்யூட்டர் நோட் சப்சிஸ்டம்களை வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட இருக்கிறது. 
 
கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.4500 கோடி ஆகும். அதிநவீன கம்ப்யூட்டிங் அமைப்பு சார்பில் இந்த திட்டத்திற்கான துவக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அமைப்பு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கி வருகிறது. 
 
மூன்று கட்டங்களில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 50 சூப்பர்கம்ப்யூட்டர்கள் கட்டமைக்கப்பட இருக்கிறது. இந்த சூப்பர்கம்ப்யூட்டர்கள் நாடு முழுக்க அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.  
 
\"\"
 
இந்த திட்டத்தில் பணியாற்றி வரும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான மிலிந்த் குல்கர்னி, திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆறு சூப்பர்கம்ப்யூட்டர்கள் தயாரிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
முதற்கட்டமாக சூப்பர்கம்ப்யூட்டர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அதன்பின் கட்டமைக்கப்பட இருக்கிறது. மற்ற மூன்று கம்ப்யூட்டர்களும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு அதன்பின் இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படுகிறது. 
 
இந்த சூப்பர்கம்ப்யூட்டர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் தலைவர் அஷூடோஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். இரண்டாவது கட்டமாக அதிவேக இண்டர்நெட் ஸ்விட்ச், கம்ப்யூட் நோட் மற்றும் நெட்வொர்க் சிஸ்டம்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கிறது.
 
\"\"
 
மூன்றாவது கட்டமாக அனைத்து சூப்பர்கம்ப்யூட்டர்களும் கட்டமைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
 
இந்தியாவில் சூப்பர்கம்ப்யூட்டிங் மிஷன் 1988-ம் ஆண்டு துவங்கப்பட்டது. முதற்கட்டமாக பரம் சூப்பர்கம்ப்யூட்டர்கள் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டம் பத்து ஆண்டுகள் நீடித்தது. தற்சமயம் அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உலகின் தலைசிறந்த சூப்பர்கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படு வருகிறது.     
                                            
இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் மொத்தம் 25 சூப்பர்கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை வானிலை, பருவ நிலை மாற்றம் மற்றும் அணு எதிர்வினைகள் சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.