மனித உடலின் வியத்தகு விஷயங்கள்

மனித உடலின் வியத்தகு விஷயங்கள்

மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639. மனித மூளையில் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன. மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து, மூளையின் ரத்த ஓட்டம் நின்று விடுகிறது. மூளையில் உள்ள நியுரான்களின் எண்ணிக்கை 1400. மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33. மனித மூளையின் எடை 1.4 கிலோ.

உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 டிகிரி. மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லிட்டர். உடலின் மெல்லிய சருமம் கண் இமை. மனித உடலில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி. ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.

மனிதனின் கண் நிமிடத்திற்கு 25 முறை மூடித்திறக்கிறது. நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ., ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லிட்டர். மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள எனாமல். நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன. நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ. நம் உடல் எடையில் 9 சதவீதம் ரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவீதம் நீர்தான். நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.

நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்க போதுமானது. நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவீதமும், யூரியா 2 சதவீதமும், கழிவுப்பொருட்கள் 2 சதவீதமும் உள்ளன.

நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கிறோம். முழுவளர்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும். நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன. நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.

உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது. நமது உடலில் உள்ள ஈரல் 500 வகையான வேலைகளை செய்கிறது. மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் ஆகும்.

மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான். மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது. மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால், அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமம். நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோ மீட்டர். அதுபோல தும்மும் போது, கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.