மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி நினைவு நாள்: ஏப்ரல் 3, 1680

மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி நினைவு நாள்: ஏப்ரல் 3, 1680

பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே மராட்டியப் பேரரசின் அடித்தளங்களை அமைத்தவர். சாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாயின் இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார். பிஜாப்பூர் சுல்தானியம், டெக்கான் சுல்தானியர்கள் மற்றும் மொகாலியர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் இராணுவ சேவைகளை அளித்த இவரது தந்தை சாஹாஜி, ஒரு மராட்டிய தளபதியாக விளங்கியவர்.

ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் (இந்திய சுயாட்சி) சித்தாந்தத்திற்கு ஆதரவளித்த சிவாஜி ராஜே போஸ்லே, பிஜாப்பூர் சுல்தானியத்திற்கும், இறுதியாக வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் அன்னிய ஆட்சிக்கும் நேரடியாக சவால் விட அவர்தம் தோழர்களுடனும், வீரர்களுடனும் ஓர் இந்து கோவிலில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். சிவாஜி, அவரின் வாழ்நாளில், மேற்கத்திய இந்தியாவின் தற்போதைய மாநிலமான மஹாராஷ்டிராவில் வலிமையாக பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியைக் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார். ஒடுக்குமுறை ஆட்சியாளர்களால் தாக்குதல்களுக்கு உட்படாத ஓர் ஐக்கிய இந்தியா தான் சிவாஜியின் நோக்கமாக இருந்தது.

நன்கு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவம் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளின் உதவியுடன் பேரரசர் சிவாஜி, ஒரு பொதுவாட்சியை உருவாக்கி அமைத்தார். பெண்களை யுத்த காரணத்திற்காக பயன்படுத்துதல், மத அடையாள சின்னங்களை அழித்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய மத மாற்றம் போன்ற அப்போதிருந்த பொதுவான பழக்கங்கள் அவர் நிர்வாகத்தில் முற்றிலுமாக எதிர்க்கப்பட்டன. அவர் தம்முடைய காலத்தில் பக்தியும், பரந்த மனப்பான்மையும் கொண்ட சிறந்த அரசராக விளங்கினார். சிவாஜி மகாராஜா, அவருக்கென இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான முறைகளை வகுத்திருந்தார். மராத்தியில் கானிமி காவா என்றழைக்கப்படும், கொரில்லா உத்திகளைப் பயன்படுத்துவதில் அவர் நிபுணராக விளங்கினார். அது இறப்பு எண்ணிக்கையையும், வேக தாக்குதல், திடீர் தாக்குதல், ஒருமுகப்பட்ட தாக்குதல் போன்ற பல்வேறு காரணிகளை மையப்படுத்தி இருந்தது. அவரின் எதிரிகளை ஒப்பிடும் போது, பேரரசர் சிவாஜியிடம் மிகச்சிறிய இராணுவமே இருந்தது. ஆகவே இந்த சமமின்மையைச் சமாளிக்க உதவும் வகையில் தான், அவர் கொரில்லா யுத்தத்தை செய்ய வேண்டி இருந்தது.

அவர் பேரரசின் பெரும்பாலான பகுதிகள் கடற்கரையாக இருந்தன, அவர் தம் தளபதி கான்ஹோஜி ஆங்ரேயின் கீழ் அதனை ஒரு வலிமையான கடற்படை கொண்டு பாதுகாத்து வந்தார். வெளிநாட்டு கடற்படை கப்பல்களை, குறிப்பாக போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிஷாரின் கப்பல்களை மடக்கி வைப்பதில் அவர் வெற்றிகரமாக இருந்தார். மிகப்பெரிய முதல் கடற்படை தளத்தை உருவாக்குவதற்கான அவரின் தொலைநோக்கு பார்வையால், அவர் \"இந்திய கடற்படையின் தந்தை\" என்று அழைக்கப்படுகிறார். கடற்புற மற்றும் நிலப்பகுதி கோட்டைகளை உருவாக்குவது மற்றும் பாதுகாப்பதென்பது சிவாஜி மகாராஜின் இராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. கடற்கரை மற்றும் கடல்எல்லைகள் மீதான சிவாஜியின் பாதுகாப்பு, பிரிட்டிஷ் ஆட்சியின் விரிவாக்கத்தையும், இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் அவர்களின் வர்த்தகத்தையும் தவிர்க்க முடியாமல் தாமதப்படுத்தியது.

இவ்வளவு திறமைவாய்ந்த சத்ரபதி சிவாஜி இரத்தபெருக்கு நோயான இன்டெஸ்டினல் ஆன்த்ரக்ஸினால் இறந்ததாக கூறப்படுகிறது. அவரின் இறுதிச்சடங்கு அவர் மகன் ராஜாராம் மற்றும் மனைவி சோயராபாய் முன்னிலையில் ராஜ்கட்டில் நடைபெற்றது. சிவாஜி மகாராஜின் இறப்பிற்கு பின்னர், அவர் மூத்த மகன் சாம்பாஜியும், சோயராபாயும் பேரரசின் கட்டுப்பாட்டைக் காப்பாற்ற போராடினார்கள். ஒரு சிறிய போராட்டத்திற்கு பின்னர் சாம்பாஜி சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டார்.

ஓர் ஏகாதிபத்திய சக்திக்கு எதிரான அவரின் போராட்டத்தினால், இரண்டு நூற்றாண்டுகளுக்கு பின்னரும் தொடர்ந்த இந்திய சுதந்திர போராட்டத்தில் சிவாஜி மகாராஜ் சுதந்திர போராட்டவீரர்களின் ஒரு முன்னுதாரணமாக இருந்தார். அவர் ஒரு சிறந்த அரசராக நினைவு கூறப்படுகிறார். மேலும் இந்திய வரலாற்றில் உள்ள ஆறு பொற்காலங்களில் ஒன்றாக அவர் ஆட்சி புரிந்த காலம் போற்றப்படுகிறது. சிவாஜி மகாராஜாவின் ஆட்சி ஒரு வீரம் மிகுந்த, முன்மாதிரியான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மஹாராஷ்டிராவின் பள்ளிக்கூட பாடப்புத்தகங்கள் விளக்குகின்றன, மேலும் அவர் நவீன மராட்டிய தேசத்தின் நிறுவனர் என்றும் கருதப்படுகிறார். ஒரு நீண்டகால மஹாராஷ்டியவாத அடையாளத்தை உருவாக்குவதிலும், அதை பலமான இராணுவ மற்றும் நியாய பாரம்பரியங்களுடன் ஒன்றி கலப்பதற்கும் அவர் கொள்கைகள் கருவியாக இருந்துள்ளன.

ஒரு பிராந்திய அரசியல் உட்கட்சியான சிவசேனா, சிவாஜி மகாராஜிடம் இருந்து முன்னுதாரங்களைப் பெற வேண்டும் என்று கோருகிறது. சிவாஜி மகாராஜை கௌரவிக்கும் வகையில், சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு பொதுத்துறை கட்டிடங்களும் மற்றும் பிற இடங்களும் பெயரிடப்பட்டது போன்றே, மும்பையில் உள்ள உலக பாரம்பரிய இடமான விக்டோரியா டெர்மினஸ் மற்றும் சஹார் சர்வதேச விமான நிலையம் இரண்டும் முறையே சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் என்று பெயர் மாற்றப்பட்டன. புதுடெல்லியில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து நிலையத்திற்கும் சிவாஜி மகாராஜின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய கப்பற்படையின் தி ஸ்கூல் ஆப் நேவல் இன்ஜினியரிங் என்பது ஐஎன்எஸ் சிவாஜி என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூசியம் என்பது சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கரஹாலியா என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.