மருத்துவமனைகளை தொடங்குகிறது ஐ.டி.சி. நிறுவனம்

மருத்துவமனைகளை தொடங்குகிறது ஐ.டி.சி. நிறுவனம்

பல்வேறுபட்ட நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஐ.டி.சி. நிறுவனம் நாடு முழுவதும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் தொடங்க பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற ஐ.டி.சி. நிறுவன இயக்குநர்கள் குழு கூட்டத்தில் மருத்துவமனைகள் தொடங்குவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதற்கு பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறுவது என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், நாடு முழுவதும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கும் திட்டத்துக்குப் பெரும்பான்மையான பங்குதாரர்கள் தங்களது ஒப்புதலைத் தெரிவித்துள்ளனர் என்று ஐ.டி.சி. நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்குத் தெரிவித்துள்ளது.

ஐ.டி.சி நிறுவனம் சிறப்பு மருத்துவமனைகளை அமைக்கும் நிலையில் அது அப்பல்லோ, ஃபோர்டிஸ், மேக்ஸ் ஹெல்கேர் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் என்று கருதப்படுகிறது.

மருத்துவ-சுகாதார சேவை மையங்கள், நடமாடும் சுகாதார மையங்கள், நோய் கண்டறியும் பரிசோதனை மையங்கள், மருந்தகங்கள், பாலிகிளினிக், மருத்துவ உபகரண விற்பனை மையங்கள் ஆகியவற்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஐ.டி.சி. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.