மலிவு விலையில் சியோமி ரெட்மி 4: விரைவில் வெளியீடு

மலிவு விலையில் சியோமி ரெட்மி 4: விரைவில் வெளியீடு

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 4A ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்திய சந்தையில் ரூ.5,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் ரெட்மி 3S மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் விரைவில் வெளியிடப்படும் என சியோமி தெரிவித்துள்ளது. இதனிடையே சியோமி நிறுவனம் ரெட்மி 4 மற்றும் ரெடமி 4 பிரைம் உள்ளிட்ட மாடல்களை வெளியிடலாம் என கூறப்படுகிறது.    
 
சியோமி இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் மனு ஜெயின் தனது ட்விட்டரில் டீஸர் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து இத்தகவலை உறுதி செய்துள்ளார். புகைப்படத்தில் வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்ட போன் காணப்படுகிறது. இதே போன்ற ரெட்மி 4 கடந்த ஆண்டு நவம்பரில் சீன சந்தைகளில் வெளியிடப்பட்டது. 
 
சீனாவில் ரெட்மி 4 ஸ்மார்ட்போன் CNY 699 அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,900 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரெட்மி 4 பிரைம்  CNY 899 அதாவது இந்திய மதிப்பில் ரூ.8,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
\"\"
 
சிறப்பம்சங்களை பொருத்த வரை ரெட்மி 4 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் எச்டி 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், 2 ஜிபி ரேம், 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 
 
ரெட்மி 4 பிரைம் ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, ப்ளூடூத் 4.2 வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் MIUI 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.  
 
மலிவு விலை ரெட்மி 4A அமேசான் மற்றும் Mi.com தளங்களில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.0 இன்ச் எச்டி 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், 2 ஜிபி ரேம், 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 
 

 

இத்துடன் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 4ஜி வோல்ட்இ, வைபை, b/g/n, GPS/ A-GPS மற்றும் பல்வேறு சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3120 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.