மஹேந்திரா KUV100 NXT வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

மஹேந்திரா KUV100 NXT வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய KUV100 NXT மாடலினை வெளியிட மஹேந்திரா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மஹேந்திராவின் புதிய KUV100 NXT அக்டோபர் 10-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பேஸ் மாடல் மஹேந்திரா 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

புதிய KUV100 NXT ஏற்கனவே விநியோகஸ்தர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் ஃபோர்டு ஃபிகோ மாடல்களுக்கு சமமான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபேஸ்லிஃப்ட் KUV100 NXT மாடல் அந்நிறுவன விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

\"\"

புதிய மாடலில் வடிவைப்பு மற்றும் மெக்கானிக்கல் பாகங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பம்ப்பர் மற்றும் கிரில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் அலாய் வீல், பின்புற பம்ப்பர் உள்ளிட்டவையும் மாற்றப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த தோற்றமும் அழகாக காட்சியளிக்கிறது.

இதனால் KUV100 NXT சாலைகளில் இருக்கும் குழிகள் மற்றும் வேகத்தடைகளில் குறுகிய காலத்தில் கட்டுப்படுத்த முடியும். இதன் சஸ்பென்ஷன் டியூன் செய்யப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்தமாக வாகனத்தை சீராக இயக்க முடியும். இது வாகனத்தில் ஏற்படும் சத்தம், அதிர்வுகளை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டாப் என்ட் மாடலின் இன்டீரியர் அம்சங்களில் முழுமையான பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. டாப் என்ட் மாடல் வாங்குவோர் ஐந்து பேர் அமரக்கூடிய சீட் பெற முடியும். இத்துடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.