
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹைப்ரிட்: விரைவில் வெளியாகலாம் என தகவல்
மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்விஃப்ட் ஹைப்ரிட் மாடல் கார் ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுவரை ஸ்விஃப்ட் ஹைப்ரிட் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகாத நிலையில், கார்டொக் வாசகர் ஒருவர் புதிய ஸ்விஃப்ட் ஹைப்ரிட் மாடல் காரின் புகைப்படங்களை பகிரந்து கொண்டுள்ளார்.
சர்நதேச சந்தையில் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் ஹைப்ரிட் 10KW எலெக்ட்ரிக் மோட்டார், 1.2 லிட்டர் 91 Ps இன்ஜின் கொண்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. புதிய மாடலின் 2-வீட் டிரைவ் லிட்டருக்கு 32 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விஃப்ட் ஹைப்ரிட் மாடல் சில கிலோமீட்டர் எலெக்ட்ரிக் திறன் கொண்டிருப்பதாக சுசுகி தெரிவித்துள்ளது. ஜெனீவா நகரில் நடைபெற்ற ஆட்டோ விழாவில் புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய AMT இன்ஜின் டிசையர் மாடலில் வழங்கப்பட்ட 1.2 லிட்ர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்களை போன்றதாகும்.
புதிய ஸ்விஃப்ட் மாடல்கள் முந்தைய மாடல்களை விட 40 கிலோ வரை எடை குறைவாக இருக்கிறது. புதிய ஸ்விஃப்ட் ஹீன்டாய் கிராண்ட் i10, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய ஸ்விஃப்ட் மாடல் விலை ரூ.5.2 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.8.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்விஃப்ட் ஹைப்ரிட் மாடலில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் ஏற்கனவே ஸ்பை படங்கள் வாயிலாகவும் வெளியானது. முன்பக்கம் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஸ்விஃப்ட் டிசையர் போன்றே காட்சியளிக்கிறது. பெரிய ஹெக்சாகோனல் கிரில், ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப், ப்ரோஜெக்டர் லைட் மற்றும் எல்இடி டேடைம் லேம்ப் உள்ளிட்டவை கொண்டுள்ளது.