மாறுபட்ட கோணத்தில் மனநலத்தை அணுகும், அரசு மனநலக்காப்பகம்!

மாறுபட்ட கோணத்தில் மனநலத்தை அணுகும், அரசு மனநலக்காப்பகம்!

தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் பழைமையானதும், பெரியதுமானது சென்னை கீழ்ப்பாக்கம் மனநலக்காப்பகம்.  அதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விளையாட்டுவிழா  இன்று நடைபெற்றது. ஓட்டப்போட்டி, சாக்குப்போட்டி, லெமன் அண்ட் ஸ்பூன், கேரம், செஸ் மற்றும் கிரிக்கெட் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அதில் அவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டனர்.

\"மனநலக்காப்பகம்\"

இந்த நிகழ்ச்சியில் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர். நாராயணபாபு, மருத்துவக் கல்வி இயக்குநர் எடவின் ஜோ, கூடுதல் காவல் ஆணையர் எஸ்.என். சேஷசாய் மற்றும் காவல் துணை ஆணையர் ஏ. ராதிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்களும் ஸ்டால்களாக வைக்கப்பட்டன.

\"விளையாட்டுப்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்மாதிரி விழாக்கள் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருவதோடு அவர்களின் மனநல மேம்பாட்டுக்கும் உறுதுணையாக உள்ளதை மறுக்க முடியாது. உடலும், உள்ளமும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையன; ஒன்றை ஒன்று சார்ந்திருப்பன. ஆரோக்கியமான உடல்நலம், அமைதியான மனநலத்துக்கு அடிப்படையாகும். \'Sound Mind in a Sound Body\' என்பதற்கேற்ப விளையாட்டு, உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை உடல் வழியாக மனம் இளைப்பாற உதவுகிறது. மனதை அமைதியோடு வைத்திருக்க வேண்டும் என்றால் உடலைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். 

மனநலக் காப்பகத்தின் இந்த எழில்மிகு சூழலும், அவர்களின் உடல் ஆரோக்கியமும்,அவர்களின் மனநலத்தையும் மேம்படுத்தும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.