முகப் பொலிவுக்கு உதவும், பருக்கள் நீக்கும்... மாம்பழ ஃபேஸ் மாஸ்க்!

முகப் பொலிவுக்கு உதவும், பருக்கள் நீக்கும்... மாம்பழ ஃபேஸ் மாஸ்க்!

இந்தக் கோடை காலம் நமக்குத் தந்திருக்கும் ஒரே நல்ல விஷயம், மாம்பழ சீசன்! மாம்பழப் பிரியர்கள் ரசித்து, ருசிக்க விதவிதமான வகைகள் சந்தையில் கொட்டிக்கிடக்கின்றன. தமிழர்களின் முக்கனிகளில் முக்கியமான பழம்! இதன் சுவைக்கு ஈடு, இணை ஏதும் இல்லை. மாம்பழத்தின் சுவை இருக்கட்டும்... இது நம் உடல்நலத்துக்குத் தரும் நன்மைகளும் அநேகம்! அதிலும் ஆரோக்கியத்தோடு நம் அழகுக்கு இது தரும் பங்களிப்பு அபாரமானது. முகப்பொலிவு, முகப்பருவைத் தடுப்பது, மிருதுவான தோல் பராமரிப்பு... என பல பலன்களை மாம்பழ ஃபேஸ் மாஸ்க் தரும். அவற்றுக்கான சில வழிமுறைகள் இங்கே...

மாம்பழத்தைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...

மாம்பழத்தில் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலம் (Alpha hydroxy acid) உள்ளது. இது தோலில் இருக்கும் பழுதடைந்த (அ) இறந்த செல்களுக்கு இடையில் இருக்கும் இணைப்புகளைத் துண்டிக்கும். அவை எளிதாக உடைந்துவிடுவதற்கான வேலைகளை செய்வதற்கும் மிகவும் உதவும்.

\"மாம்பழம்\"

மாம்பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை, தோல்களை சீர்ப்படுத்தும் பணிகளைச் செய்கின்றன. உடல்வறட்சியால் நம் தோல் உலர்ந்து போவதில் இருந்து காப்பதுதான் வைட்டமின் ஏ-யின் முக்கியமான வேலை. தோல் பகுதி எப்போதும் குளிர்ச்சியோடு இருப்பதற்கும் இது உதவிபுரியும். வைட்டமின் பி, வயது முதிர்வின்போது ஏற்படும் தோல் தளர்ச்சியை முற்றிலுமாகத் தடுத்து, தோல் இயல்பான தன்மையோடு இருக்க உதவும். வைட்டமின் சி, தோலுக்கு மிகவும் அவசியமான புரதமான கொலாஜெனை (Collagen) அதிகப்படுத்துகிறது. இதன்மூலம், தோலின் இளமைத் தன்மையைப் பராமரிக்கிறது. மாம்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், தோல் காய்ந்துவிடாமல் மிருதுவாக இருப்பதற்கு உதவுகிறது.

இப்படி நம் தோலுக்கு நன்மைகளை ஏற்படுத்தும் மாம்பழத்தைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் செய்யலாம். அதன்மூலம், முகப்பொலிவு அதிகரிக்கும். இதைச் செய்வதற்கான வழிமுறைகள் சில...

\"மாம்பழ

முகப்பொலிவுக்கான  மாஸ்க் 

தேவையானவை: 
மாம்பழப் பசை - 1 டேபிள்ஸ்பூன் 
பாலேடு (Milk Cream) - தேவையான அளவு.

செய்முறை:
மாம்பழப் பசையை பாலேட்டோடு கலந்துகொள்ளவும். முகத்தில் இந்தக் கலவையைத் தடவி, 30 நிமிடங்களுக்கு உலரவைக்கவும். பின்னர் கழுவிவிடவும். இந்த மாஸ்க் முகம் அதிகப் பொலிவு பெற உதவிபுரியும்.

முகப்பருக்கள் போக்குவதற்கான  மாஸ்க்

தேவையானவை: 
மாங்காய் - 1
தண்ணீர் - தேவையான அளவு. 

செய்முறை:
தோலை உரிக்காமல் மாங்காயைத் தண்ணீரில் கொதிக்கவைக்கவும். கொதித்ததும், சூடு ஆறும் வரை அதை அப்படியே உலரவைக்கவும். உலர்ந்ததும் மாங்காயோடு சேர்ந்திருக்கும் நீரை முகத்தில் அப்ளை செய்யவும். இந்த மாஸ்க், முகப்பருவை விரட்ட சிறந்த தீர்வாக இருக்கும்.

\"ஃபேஸ்

முகப் பளபளப்புக்கான  மாஸ்க்

தேவையானவை:  
அரைத்த ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன் 
மாம்பழப் பசை - 1 டேபிள்ஸ்பூன் 

செய்முறை:

பொதுவாகவே, ஓட்ஸுக்கு தோலை மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்றும் தன்மை உள்ளது. இது, தோலின் எண்ணெய் தன்மையை குறைக்க வழிவகுக்கும். மேலும், ரத்த ஓட்டத்தை சீராக்கி ஆரோக்கியமான புதிய செல்கள் உருவாகவும் துணை நிற்கும்.

அரைத்த ஓட்ஸ், மாம்பழப் பசை இரண்டையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். இதை மிருதுவாக முகத்தில் அப்ளை செய்யவும். முகம் முழுக்க மாம்பழத்தின் சாறு பரவவேண்டியது மிகவும் அவசியம். முகத்தில் இந்தக் கலவை முழுவதுமாக பரவும் வரை பொறுத்திருக்கவும். சில நிமிடங்களுக்குப் பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். பிறகு, குளிர்ந்த நீரிலும் முகத்தைக் கழுவவும். குளிர்ந்த நீரில் கழுவும்போது, முகத்தில் உள்ள சிறுசிறு துளைகளும்கூட சுத்தப்படுத்தப்படும். முகம் பட்டுப்போல் பளபளக்கும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.